கிள்ளிக் கொடுக்கும் இடத்தில் அள்ளி கொடுத்த இந்திய வங்கிகள்!! புஷான் ஸ்டீல்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில நாட்களுக்கு முன்பு சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின் லஞ்ச பெற்றதற்காக சிபிஐ அவரை கைது செய்தது, மேலும் சிபிஐ சோதனையில் 50 இலட்சம் லஞ்ச பணமும் சிபிஐ அதிகாரிகள் கைபற்றினர். இவ்வழக்கில் தொடர்புடைய புஷான் ஸ்டீல் நிறுவனத்தின் துணைத்தலைவர் நீரஜ் சிங்காலை கடந்க வாரம் சிபிஐ கைது செய்தது.

 

இந்நிலையில் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு 51 வங்கிகள் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுத்துள்ள சிபிஐ விசாரனையில் தெரியவந்துள்ளது.

(READ: Indian Bank Swarna Nidhi Deposit!!)

ஸ்டேட் வங்கி

ஸ்டேட் வங்கி

வொர்க்கிங் கேபிடலுக்கு இந்தியின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையில் வங்கிகள் கடன் கொடுத்திருக்கின்றன. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமையில் மேலும் பல வங்கிகள் இந்த ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

அருந்ததி பட்டாச்சார்யா

அருந்ததி பட்டாச்சார்யா

புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த அனைத்து வங்கிகளின் சந்திப்பு நிகழும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்தார். மேலும் புஷான் ஸ்டீல் நிறுவனத்துக்கு எஸ்.பி.ஐ. வங்கி மட்டும் சுமார் 6,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் கொடுத்திருக்கிறது.

 புஷான் ஸ்டீல்
 

புஷான் ஸ்டீல்

இந்தியாவில் டாடா ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்திற்கு பிறகு மூன்றாவது பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனம் புஷான் ஸ்டீல். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 20 லட்சம் டன்கள் உற்பத்தி செய்கிறது. இந்த வழக்கின் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 380 ரூபாயில் இருந்து 177 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.

இரும்பு மற்றும் ஸ்டீல் துறை நிறுவனங்கள்

இரும்பு மற்றும் ஸ்டீல் துறை நிறுவனங்கள்

ஆகஸ்ட் 2ம் தேதி சிண்டிகேட் வங்கியின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 12 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வங்கிகளுக்கு அதிக அளவு கடனை நிலுவையில் வைத்திருப்பது இரும்பு மற்றும் ஸ்டீல் துறை நிறுவனங்கள் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bhushan Steel plunges 10%, locked in lower circuit; down 55% in just 8 sessions

Shares of Bhushan Steel LtdBSE -9.98 % remained under intense selling pressure so far in the month of August after CBI arrested Neeraj Singal, Vice Chairman and Managing Director of the company, in connection with Rs 50 lakh bribery scandal involving CMD of Syndicate Bank S K Jain. 
Story first published: Tuesday, August 12, 2014, 16:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X