தொழில்துறை உற்பத்தி 1.3% சரிவு!! மின் உற்பத்தி 7.8% உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.7 சதவீதத்தில் இருந்து அதிரடியாக 3.4 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. 2015ஆம் நிதியாண்டின் மே மாதத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஆடர்கள் வந்து குவிந்ததால் இதன் வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது ஆனால் ஜூன் மாதத்தில் இந்த அளவீடு 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.

 

மேலும் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மொத்த வளர்ச்சி 3.9 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இதே காலாண்டில் இத்துறையின் வளர்ச்சி (-)1 சதவீதம் என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.

(READ: 6 reasons to buy Gold ETFs in place of physical gold)

மூலதன பொருட்கள் துறை

மூலதன பொருட்கள் துறை

2014ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டங்களில் நுகர்வோர் பொருட்கள் துறையில் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், கடந்த வருடம் இதே காலாண்டை ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகவும் குறைவு. மேலும் இத்துறையில் முதலீடு அதிகரித்துள்ளாதால், இந்த இக்கட்டானா சூழ்நிலையிலும் இதன் வளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது.

மின் உற்பத்தி

மின் உற்பத்தி

இதே ஏப்ரல்-ஜூன் மாத காலகட்டங்களில் மின்சார உற்பத்தி 11.3 சதவீதம் உயர்ந்துள்ளது, கடந்த வருடம் இதே காலகட்டங்களில் இதன் வளர்ச்சி வெறும் 3.5 சதவீதம் மட்டுமே இருந்தது. மேலும் இக்காலாண்டில் சுரங்கம் மற்றும் உற்பத்தி துறையின் வளரச்சி பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும் குறிப்பிடதக்க அளவு மாற்றத்தை கொண்டுள்ளது. மேலும் துறைவாரியாக வளர்ச்சி விகிதத்தை பார்ப்போம்

சுரங்கம் மற்றும் குவாரி துறை
 

சுரங்கம் மற்றும் குவாரி துறை

நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் சுரங்கம் மற்றும் குவாரி துறையின் வளர்ச்சி 3.2 சதவீதம் பதிவு செய்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் (-) 4.6 சதவீதமாக பதிவானது குறிப்பிடதக்கது.

தொழிற்சாலை உற்பத்தி துறை

தொழிற்சாலை உற்பத்தி துறை

அன்னிய செலவாணியை அதிகரிக்கும் இத்துறையில் 3.1 சதவீதம் பதவி செய்துள்ளது, கடந்த வருடம் இது (-) 1.1 சதவீமாக இருந்தது

நுகர்வோர் பொருட்கள் துறை

நுகர்வோர் பொருட்கள் துறை

இந்த மக்களை அதிகம் பாதித்த துறை நுகர்வோர் பொருட்கள் துறை தான். 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இத்துறை (-) 9.6 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.

22 தொழிற்துறை

22 தொழிற்துறை

ஏப்ரல-ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியாவில் 22 தொழிற்துறை வளர்ச்சி வகிதத்தை கணித்ததில் 15 துறைகள் வளர்ச்சியும், 7 துறைகள் சரிவையும் சந்தித்துள்ளது.

சதி செய்த உற்பத்தி துறை

சதி செய்த உற்பத்தி துறை

இக்காலாண்டில் முதல் இரண்டு மாதம் சிறப்பாக செயல்பட்டாலும், ஜூன் மாதம் உற்பத்தி துறையின் மோசமாக செயல்பாட்டின் காரணமாக மற்றத்துறைகளை கடுமையாக பாதித்துள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைவர் சந்திரஜித் பானர்ஜி தெவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Factory output slips to 3.4 p.c. in June

Industrial output growth slowed to 3.4 per cent in June from 4.7 per cent in May. Cumulative growth in the first quarter of the current fiscal stood at 3.9 per cent against a contraction of (-) 1 per cent in the year-ago period, indicating a considerable improvement in business sentiment.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X