ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய மிகப்பெரிய ஊழல்..!

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையினை கொண்ட இந்தியா இன்று 69வது குடியரசு தின விழாவைக் கொண்டாடி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு எண்ணற்ற வளர்ச்சிகளை இந்தியா பெற்று இருந்தாலும் சிறிதும் பெரிதுமான ஊழல்களில் சிக்கி அதிக உழல் நடைபெறும் நாடுகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை அரசு அதிகாரிகளும் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளும் தான் செய்துள்ளனர்.

 

சில ஊழல்களில் நாட்டைக் காக்க வேண்டிய ராணுவ அதிகாரிகளே ஈடுபட்டுப்பட்டு இருந்தது வெட்கத்திலும் வெட்கம்!

நீங்களும்.. நானும்...

நீங்களும்.. நானும்...

அதிகாரிகள் மட்டும் அல்ல, சாதாரண மக்களும் சிறுசிறு ஊழல்களில் தினமும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இத்தகைய ஊழல் குற்றங்களில் ஒவ்வொரு இந்தியனுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை.

கோடிகளில் புரண்டு..

கோடிகளில் புரண்டு..

நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் என்ற அளவில் சாதாரண மக்களின் ஊழல் கணக்குகள் இருந்தாலும், சமீப ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ள 2ஜி அலைக்கற்றை ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், போஃபர்ஸ் ஊழல், ஹவாலா ஊழல், மாட்டுத் தீவன ஊழல் ஆகிய மோசடிகளில் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் கோடிகளில் புரண்டுள்ளனர்.

15 மிகப்பெரிய ஊழல்

15 மிகப்பெரிய ஊழல்

இப்போது இந்தியாவை உழுக்கிய 15 மிகப்பெரிய ஊழல்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஊழல்களின் மூலம் உலக நாடுகளின் மத்தியில் இந்தியா வெட்கத்தில் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல்
 

ஹெலிகாப்டர் பேர ஊழல்

சமீபத்தில் இந்தியாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஊழல்களில் இதுவும் ஒன்று. இந்திய ராணுவத்துக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ள இந்த ஊழலில் ரூ.74.5 கோடி வரை இத்தாலிய கம்பெனியுடன் பேரம் நடந்துள்ளது.

நிலக்கரி ஊழல்

நிலக்கரி ஊழல்

சுமார் 155 ஏக்கர் அளவிலான நிலக்கரி சுரங்கங்களை முறையாக ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததன் மூலம் இந்திய அரசு சுமார் ரூ.185,591 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. 2004க்கும் 2009க்கும் இடையே நடந்த இந்த ஊழல் கடந்த 2012ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்தது.

தாத்ரா ஊழல் (Tatra)

தாத்ரா ஊழல் (Tatra)

தாத்ரா வெக்ட்ரா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் இணைந்து 7000க்கும் அதிகமான ட்ரக்குகளை இந்திய ராணுவத்திற்காக உற்பத்தி செய்து கொடுத்தது. ஆனால் ராணுவ தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பதவியேற்றபோது, அவர் லஞ்சம் பெற்றுக் கொண்டு இந்த ட்ரக்குகள் வாங்குவதை ரத்து செய்து விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த ஊழலில் ரூ.750 கோடிக்கு பேரம் நடந்துள்ளது.

ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் பேர ஊழல்

ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் பேர ஊழல்

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக இருந்த மாதவன் நாயரின் பெயர் இந்த ஊழலில் முக்கியமாக அடிபட்டது. இரண்டு செயற்கக்கோள்களில் S-band ட்ரான்ஸ்பாண்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களை மத்திய அரசிடம் இஸ்ரோ மறைத்து விட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.200,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

காமன்வெல்த் விளையாட்டில் ஊழல்

காமன்வெல்த் விளையாட்டில் ஊழல்

2010ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு ஊழல்கள் தாண்டவமாடின. அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுரேஷ் கல்மாடிதான் இந்த ஊழலின் பிரதான குற்றவாளியாகக் கருதப்பட்டார். சில நாட்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டார். இதில் ரூ.95 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது.

கால்நடைத் தீவன ஊழல்

கால்நடைத் தீவன ஊழல்

1996ல் பீகார் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவின் நாற்காலியே இந்த மாபெரும் ஊழலால் ஆட்டம் கண்டது. ரூ.950 கோடிக்கு கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மூன்று வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பங்கு சந்தை ஊழல்

பங்கு சந்தை ஊழல்

கேட்டன் பரேக் என்ற பங்கு சந்தை புரோக்கர், க்ளோபல் ட்ரஸ்ட் வங்கி மற்றும் மாதவ்புரா மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளின் பங்குகளை மார்க்கெட்டில் சுழல விட்டுக் கொண்டிருந்தார். அப்படி இருக்கும்போது, 1992ஆம் ஆண்டில் கனரா வங்கியிலிருந்து ரூ.48 கோடியைச் சுரண்டி ஏப்பம் விட்டபோது கையும் களவுமாக மாட்டி, ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். அவர் இந்திய பங்கு வணிகத்தில் ஈடுபட 2017ஆம் ஆண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

முத்திரைத் தாள் மோசடி

முத்திரைத் தாள் மோசடி

2003ல் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த முத்திரைத் தாள் மோசடி மூலம் மத்திய அரசுக்கு ரூ.30,000 கோடி இழப்பு ஏற்பட்டது. 300 புரோக்கர்கள் மூலம் நாட்டிலுள்ள பெரிய வங்கிகளுக்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும், பங்குச் சந்தை நிறுவனங்களுக்கும் போலி முத்திரைத் தாள்களை விற்றதாக அப்துல் கரீம் டெல்கி என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஹர்ஷத் மேத்தா

ஹர்ஷத் மேத்தா

'பிக் புல்' என்று அழைக்கப்பட்ட பங்குச் சந்தை புரோக்கர் ஹர்ஷத் மேத்தா, கடந்த 1992ல் ரூ.4,000 கோடிக்கு பங்கு சந்தை ஊழலில் புகுந்து விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஊழல்

ஐ.டி. நிறுவனங்களை உலுக்கிப் போட்ட இந்த ஊழலில் ரூ.8,000 கோடி நஷ்டம் ஏற்பட்டது. சத்யம் நிறுவனத்தின் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டார்.

ஆதர்ஷ் ஊழல்

ஆதர்ஷ் ஊழல்

மஹாராஷ்டிராவில் 2002ல் நடந்த முக்கிய ஊழல் இது. ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்காக ஆதர்ஷ் ஹவுஸிங் சொசைட்டி மூலம் ஃப்ளாட்டுகள் கட்டுவதற்காக அரசு ஒதுக்கிய நிலத்தில் பெரும் முறைகேடு எழுந்தது. இந்த ஊழலில் பெரும் புள்ளிகள் சிக்கினர். முதல்வர் அஷோக் சவான் பதவியை ராஜினாமா செய்தார்.

போஃபர்ஸ் ஊழல்(Bofors Scam)

போஃபர்ஸ் ஊழல்(Bofors Scam)

1986ல் வெளிச்சத்திற்கு வந்து இந்தியாவையே உலுக்கிய இந்த ஊழலில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி பெயர் பிரதானமாக அடிபட்டது. 'இந்தியாவின் வாட்டர்கேட் ஊழல்' என்று அழைக்கப்பட்ட இந்த பீரங்கி பேர ஊழலின் மதிப்பு ரூ.64 கோடியாகும்.

பெல்லாரி சுரங்க ஊழல்

பெல்லாரி சுரங்க ஊழல்

கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ஊழல் காரணமாக அப்போது முதல்வராக இருந்த எடியூரப்பாவின் பதவி மட்டுமல்லாமல் அவருடைய அரசியல் எதிர்காலமே அப்போது கேள்விக் குறியானது. வனத்துறை நிலத்தை அபகரித்தல் உள்ளிட்ட பல மோசடிகள் இந்த ஊழலில் நடந்திருந்தன. அந்த மாநில அரசுக்கு இதனால் ரூ.16,085 கோடி இழப்பு ஏற்பட்டது.

தலால் ஸ்ட்ரீட் ஊழல்

தலால் ஸ்ட்ரீட் ஊழல்

1998ல் நடந்த இந்த ஊழலில் ரூ.330 கோடி இழப்பு ஏற்பட்டது. இவ்வளவு பணத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு சுமார் 80 நிறுவனங்கள் காணாமலேயே போய்விட்டன. மேலும் சுதந்திர தின விழாவிற்காக இலவச இணைப்பாக 16வது ஊழல் உங்களுக்காக

ஹவாலா மோசடி

ஹவாலா மோசடி

காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு சில ஹவாலா புரோக்கர்கள் மூலம் சுமார் ரூ.1,000 கோடி வரை பணம் சப்ளை செய்யப்பட்டது. இந்தியாவையே உலுக்கிய இந்த ஹவாலா மோசடியில் ஏராளமான அரசியல் தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன. அத்வானி, சுக்லா, ஷிவ் சங்கர், ஷரத் யாதவ், பல்ராம் ஜாக்கர், மதன் லால் குரானா உள்ளிட்ட பெரும் தலைவர்களுக்கு இந்த ஹவாலா மோசடியில் பெரும் பங்கு இருந்ததாகப் புகார்கள் எழுந்தன.

இந்தியாவில்

இந்தியாவில்

இதுவரை இந்தியாவில் நடந்த மொத்த ஊழல்கள் பற்றிய தகவல்களை விக்கிப்பீடியா தொகுத்து வழங்கியுள்ளது. அதை படிக்க இதை கீளிக் பண்ணுக்கோ....

வாசகர்களுக்கான தளம்..

வாசகர்களுக்கான தளம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் தொகுத்துள்ள இந்த ஊழல்கள் பட்டியலில், இல்லாத பிற முக்கிய ஊழல்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா..?

வாசகர்கள் கருத்து பதிவிடும் தளத்தில் நீங்கள் பதிவிடலாம்.

மலையாளிகள்..!

மலையாளிகள்..!

அரபு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மலையாளிகள்..!

டெஸ்லா

டெஸ்லா

டெஸ்லாவை இழந்தது இந்தியா.. சீனாவிற்கு அடித்தது ஜாக்பாட்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top 14 scams that have rocked India

India has been rocked by a series of scams—both small and big. Is the Chopper Deal Scam another Bofors in the making? Here is a list of the 14 big ones we’ve compiled.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X