தமிழ்நாட்டில் 4ஜி சேவை துவங்கிய ஏர்செல்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் தொலைதொடர்பு சேவை வழங்கும் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் ஜம்மு கஷ்மீர் மாநிலங்களில் தனது 4ஜி சேவையை திங்கட்கிழமை முதல் துவங்கியது. இதன் மூலம் இந்தியாவில் 3 தலைமுறை (2ஜி, 3ஜி மற்றும் 4ஜி)டெக்னாலஜி-யை வழங்கி வரும் நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது.

 

வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்த வரை இந்நிறுவனம் இந்தியாவில் 4வது இடத்தில் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஜம்மு கஷ்மீர்

தமிழ்நாடு மற்றும் ஜம்மு கஷ்மீர்

இதுகுறித்து ஏர்செல் நிறுவனத்தின் சீஎம்ஒ கூறுகையில் "இந்தியாவில் 4ஜி சேவை அளிப்பது எங்கள் நீண்ட நாள் திட்டம், இத்திட்டத்தின் முதல்கட்டமாக தமிழ்நாடு மற்றும் ஜம்மு கஷ்மீர் மாநிலங்களில் வழங்க முடிவு செய்துள்ளோம். அடுத்த கட்டமாக ஆந்திர பிரதேசம், அஸ்சாம், பீகார், மற்றும் ஒடிஷா மாநிலங்களில் எங்களது 4ஜி சேவையை துவங்கப்படும்" என தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் கையிருப்பு

ஸ்பெக்ட்ரம் கையிருப்பு

ஏர்செல் நிறுவனத்திடம் 2,300 மெகாஹெட்ஸ் பேன்டில், 20 மெகாஹெட்ஸ் அளவிலான ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, அசாம், வட கிழக்கு மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் 4ஜி சேவை அளிக்க முடியும்.

ஏர்டெல்
 

ஏர்டெல்

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர் எண்ணிக்கை கொண்ட ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்து ஏர்செல் நிறுவனம் 4ஜி சேவை அளிக்கிறது.

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ்

இந்த 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைகதிரை, ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, டிக்கோனா டிஜிட்டல் மற்றும் ஆக்ரி ஆகிய நிறுவனங்கள் வைத்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் தனது 4ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aircel launches 4G services in Tamil Nadu, Jammu & Kashmir

Telecom operator Aircel on Monday launched 4G services in Tamil Nadu and Jammu & Kashmir, becoming the only private telecom operator to offer all the three existing technologies of 2G, 3G and 4G in these markets.
Story first published: Monday, August 18, 2014, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X