பிரதமரின் கழிவறை திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு!! ரூ.200 கோடி குவிந்தது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் சுகாரதத்தை மேம்படுத்தும் நோக்கில் பள்ளி குழந்தைகளுக்கு கழிவறைகளை கட்ட நிதியுதவி செய்யுமாற்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பெருநிறுவனங்களுக்கும் சுதந்திர நாளில் அழைப்புவிடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று அன்றைய தினமே ஒரியன்டல் வர்த்தக வங்கி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக 200 கழி வறைகள் கட்ட ரூ.2 கோடியை வழங்கியது. மேலும் இத்திட்டத்திற்காக டிசிஎஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

டிசிஎஸ்- பார்தி அறக்கட்டளை

டிசிஎஸ்- பார்தி அறக்கட்டளை

டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் மற்றும் பார்தி நிறுவனத்தின் அறக்கட்டளையின் சார்பாக இரு நிறுவனங்களும் இணைந்து இத்திட்டத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் அளித்துள்ளது.

இந்தியா

இந்தியா

உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்நிலையில் இந்தியா தொழிற்நுட்பம், வான்வழி ஆராய்ச்சி என பல துறைகளில் சாதனை படைத்து வந்தாலும், வட இந்தியாவில் கழிவறை வசதிகள் இல்லாத காரணத்தினால் வயல் பகுதியில் காலை கடனை கழிக்க சென்ற இரு பெண்களை கற்பழிக்கப்பட்டு, மரத்தில் தொங்கவிட்டுள்ளனர்.

சுகாதாரம்

சுகாதாரம்

இக்காரணத்திற்காக மட்டும் அல்லாமல் இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்களுக்கும் நோய்கள் மிக எளிதாக பரவக்கூடும் அபாயம் உள்ளது. மேலும் எதிர்கால இந்தியாவை, சுகாதாரமான இந்தியாவாக மாற்ற இந்த முயற்சியின் முதல் படி என்றே சொல்லலாம். 

     

    ஒரியன்டல் வர்த்தக வங்கி

    ஒரியன்டல் வர்த்தக வங்கி

    இத்திட்டத்திற்கு முதன்முதலில் ஒத்துழைப்பு கொடுத்த ஒரியன்டல் வர்த்தக வங்கி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 200 கழிவறைகள் கட்ட 2 கோடி ரூபாயை வழங்கியது.

    டாடா கன்சல்டன்சி சர்விசஸ்

    டாடா கன்சல்டன்சி சர்விசஸ்

    அதேபோல் டாடா கன்சல்டன்சி சர்விசஸ் இந்தியாவில் உள்ள 10,000 பள்ளிகளில் கழிவறை கட்ட 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவிகளில் கல்வியல் வசதிகள் மேம்படும் எனவும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

    பார்தி நிறுவனம்

    பார்தி நிறுவனம்

    பாரதி நிறுவனத்தின் கிளை நிறுவனமான பாரதி அறக்கட்டளை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக இத்திட்டத்திற்காக தத்தெடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது. அங்குள்ள பள்ளிகளில் கழிவறை கட்டுவதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக பாரதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

    English summary

    TCS pledges Rs 100 crore for PM Narendra Modi's 'Clean India' initiative

    Tata Consultancy Services (TCS), country's largest software services exporter on Monday announced that it will earmark a budget of Rs 100 crore to be spent on Prime Minister Narendra Modi-led NDA government's 'Clean India' initiative.
    Story first published: Tuesday, August 19, 2014, 15:20 [IST]
    Company Search
    Thousands of Goodreturn readers receive our evening newsletter.
    Have you subscribed?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X