இந்தியாவின் தலைசிறந்த பிராண்டாக ஹெச்.டி.எஃப்.சி!! டாடாவுக்கு "டா டா"

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கி நிறுவனமான, ஹெச்.டி.எஃப்.சி வங்கி தலைசிறந்த பிராண்டாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 9.4 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

லண்டனை தலைமையிடமாக கொண்டு விளம்பரம் மற்றும் பொது உறவுகள் துறையில் முதன்மை நிறுவனமாக விளங்கும் WPP Plc நிறுவனம், இந்தியாவில் முதன் முறையாக இந்திய நிறுவனங்களை பற்றிய BrandZ என்ற பட்டியிலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவில் 2100 நகரங்களில் செயல்படும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி பிடித்துள்ளது.

டாப் 3

டாப் 3

இப்பட்டியலில் 9,425 மில்லியன் டாலருடன் ஹெச்.டி.எஃப்.சி வங்கி முதல் இடத்தையும், 8217 மில்லியன் டாலர் மதிப்புடன் ஏர்டெல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முன்றாம் இடத்தை பொது துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி 6,828 மில்லியன் டாலர் மதிப்பீட்டுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

இப்பட்டியல்

இப்பட்டியல்

WPP Plc நிறுவனம் வெளியிட்ட இப்பட்டியலில் வங்கியியல், டெலிகாம் மற்றும் இண்சூரன்ஸ் போன்ர சேவை துறை நிறுவனங்களே அதிகளவில் உள்ளது. மேலும் பெரு நிறுவனங்கள் பல இப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பற்றி முழுமையான விபரங்களை அடுத்த ஸ்லைடரில் பார்போம்...

ஐசிஐசிஐ, பஜாஜ் ஆட்டோ
 

ஐசிஐசிஐ, பஜாஜ் ஆட்டோ

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ நிறுவனம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. அதை தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஹீரோ மோட்டோ காரப், ஐடியா, கோட்டாக் மஹிந்திரா வங்கி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதல் 10 இடத்தை பிடித்துள்ளது.

டாடாவுக்கு டா டா...

டாடாவுக்கு டா டா...

கடந்த மாதம் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் டாடா நிறுவனம் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆனால் இப்பட்டியலில் டாடா நிறுவனத்திற்கு கிடைத்த இடம் 31வது இடம். ஆய்வை மேற்கொண்ட நிறுவனம் டாடா நிறுவனத்தின் பிராண்டு மதிப்பை 569 மில்லியன் டாலராக மதிப்பிட்டுள்ளது.

உணவு பொருட்கள்

உணவு பொருட்கள்

இந்தியாவில் பல உணவு பொருட்கள் தயாரிப்புகள் இருந்தாலும் சில பிராண்டுகளை நாம் எப்போதும் மாற்றிக்கொள்ளவதில்லை அந்த வகையில் இப்பட்டியலில் மெக்டொனால்ட், நெஸ்லே, மக்கி, ஹர்லிக்ஸ், டாபர், பிரிட்டன், சன்பீஸ்ட் ஆகிய பிராண்டுகள் இதில் இடம்பெற்றுள்ளது.

சரக்கு.. முறுக்கு...

சரக்கு.. முறுக்கு...

விதவிதமான உணவு பொருட்களுக்கும் நாம் எவ்வாறு அடிமையோ அதேபோல் பல மதுபானங்களுக்கும் இந்தியார்கள் அடிமை இந்த வகையில் டாப் 50 பிராண்டுகளில் கிங்பிஷர் மற்றும் பேக்பைபர் ஆகிய இரு நிறுவனங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HDFC Bank is most valuable brand in India: Report

HDFC Bank Ltd, India’s second largest private bank by assets, emerged the No. 1 brand with a value of $9.4 billion in a list of India’s 50 most valuable brands released on Tuesday.
Story first published: Wednesday, August 20, 2014, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X