மதுபான விலை உயர்வு: அரசுக்கு ரூ.3,000 கோடி கூடுதல் வருவாய்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சில நாட்களுக்கும் முன்பு தமிழ்நாட்டில் மதுபான விலையை உயர்த்தப்பட போவதாக தகவல் வெளியானது. தமிழக அரசு ஏற்று நடத்தும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் விலையை உயர்த்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.தனசேகரன் அறிவித்தார். இதன் மூலம் அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் திரட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.தனசேகரன் உடன் மாநில தலைவர் நா.பெரியசாமி ஆகியோரும் கலந்து கொண்டு விலை உயர்விற்கான அறிக்கையை வெளியிட்டனர்.

புதிய விலை பட்டியல்..

விலை உயர்வு

விலை உயர்வு

 இத்தகைய விலை உயர்வால் மது பழக்கம் கொண்டு ஏழை மக்கள் மேலும் பாதிக்கப்பட உள்ளனர். இதனால் இக்குடும்பங்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகும். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6,823 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில், 30,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த விலை உயர்வு 20-8-2014ஆம் அன்று முதல் அமலுக்கு வந்தது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

மதுபானக்கடைகளில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் போன்ற பணி இடங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் பணியாளர்களுக்கு பணி வரன்முறைப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஊதிய உயர்வு
 

ஊதிய உயர்வு

தமிழ்நாட்டில் அதிக வருவாய் அழித்து வரும் துறைகளுள் டாஸ்மாக் நிறுவனமும் ஒன்று, ஆனால் அண்மையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சொற்ப ஊதிய உயர்வு பொருளற்றதாகும். நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் காலமுறை ஊதியம், பணி நிரந்தரம், பாதுகாப்பான பணிச்சூழல், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவும் தனசேகரன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

வருவாய் வளர்ச்சி

வருவாய் வளர்ச்சி

கடந்த 10 வருடமாக தொடர்ந்து சரசரியாக 18 சதவீத வளர்ச்சியை சந்தித்து வரும் ஒரே நிறுவனம் டாஸ்மாக் தான். மேலும் கடந்த 2011-12 ஆம் நிதியாண்டில் 18,081.16 கோடி லாபம், அதேபோல் 2012-13 ஆம் நிதியாண்டில் 21,680.67 கோடி லாபம் பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tasmac prices set to increase from Wednesday

Tipplers will have to shell out more for their alcohol from today as liquor prices have been hiked in accordance to the recent state government decision to increase the upper ceiling on excise duty on liquor. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X