டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளிய ஐடிசி!! ஃபார்சூன் இதழ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: புகையிலை மற்றும் நுகர்வுப் பொருட்களைத் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி, நாட்டில் அனைவராலும் அதிகம் பாராட்டப்படும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது என ஃபார்சூன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த டாடா குழுமத்தின் மிக முக்கிய கிளை நிறுவனமான டிசிஎஸ் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.

 

இவ்வருடம் டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இப்பட்டியலில் இவ்வருடம் புதிதாக காக்னிசன்ட், பிர்லா குழும நிறுவனமான ஐடியா செல்லுலர், ராஜ்தானி பவர் என 19 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது.

டாப் 5

டாப் 5

2014 ஆம் ஆண்டிற்கான ஃபார்சூன் அதிகம் பாராட்டப்படும் நிறுவன பட்டியலில், ஐடிசி நிறுவனம் முதல் இடத்திலும், அதற்கடுத்தபடியாக, கட்டுமான நிறுவனமான லார்ஸன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனமும், மூன்றாவது இடத்தில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனமும், அடுத்து கார் தயாரிப்பாளரான மாருதி சுஜுகி நிறுவனமும் கடைசியாக ஐந்தாவது இடத்தில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியும் இடங்களைப் பிடித்துள்ளன.

கடந்த வருடம்

கடந்த வருடம்

2013 ஆம் ஆண்டின் பட்டியலை ஒப்பிடும்போது, டிசிஎஸ் முதலிடத்திலும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் இரண்டாம் இடத்திலும், ஐடிசி மூன்றாம் இடத்திலும், இன்ஃபோசிஸ் நான்காம் இடத்திலும் எஸ்பிஐ வங்கி அதே ஐந்தாம் இடத்திலும் இருந்தன. டிசிஎஸ் இந்த வருடம் ஆறாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

19 புதிய நிறுவனங்கள்
 

19 புதிய நிறுவனங்கள்

மேலும் இந்த வர்த்தகச் செய்தி இதழ், இந்த வருடம் இவ்வருடம் 19 புதிய நிறுவனங்கள் நுழைந்துள்ளதகவும், இதில் ஜிஎம்ஆர் இன்ஃப்ரா, ஷபூர்ஜி பல்லோஞ்ஜி, ஐடியா செல்லுலர், பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவர் (பிஆர்பிஎல்), காக்னிசன்ட் மற்றும் அப்பாட் ஃபார்மா ஆகியவை இதில் அடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த பட்டியல், ஹே குழுமத்தின் கூட்டுமுயற்சியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை

மின்சாரத்துறை

துறைவாரியான தரவரிசைப் பட்டியலில், பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி ( 22) முதலிடத்தை பிடித்துள்ளது, அதை தொடர்ந்து டாடா பவர்(27), பிஆர்பிஎல்(35), பவர்க்ரிட் அண்ட் பிஎஸ்இஎஸ் யமுனா பவர் ஆகியவை முதல் ஐந்து இடங்களையும் பிடித்தன. இவற்றைத் தொடர்ந்து என்பிசிஐஎல், அதானி பவர், என்ஹெச்பிசி, சிஇஎஸ்சி, குஜராத் மாநில மின்கழகம், சுஸ்லான் பவர், கல்பதரு பவர் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் குஜராத் உஜ்ரா விகாஸ் நிகாம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

தொலைத்தொடர்புத் துறை

தொலைத்தொடர்புத் துறை

வோடஃபோன் இந்தியா முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலர், டாட்டா கம்யுனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ், ஏர்செல், டாட்டா டெலிசர்விசஸ், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், எம்டிஎஸ், டுலிப் டெலிகான் மற்றும் யுனிநார் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

மருந்து உற்பத்தித் துறை

மருந்து உற்பத்தித் துறை

அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து அப்பாட் இந்தியா, ஜிஎஸ்கே ஃபார்மா, காடிலா, சன் ஃபார்மா, சிப்லா மற்றும் ரான்பாக்ஸி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ITC topples TCS to become India's most admired company

Tobacco-to-FMCG conglomerate ITC has replaced Tata group's IT giant TCS as the country's most admired company on a Fortune magazine list, which has got as many as 19 new entrants including Cognizant, Birla group firm Idea Cellular and discom BSES Rajdhani Power Ltd.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X