பொருளாதார ஆலோசகராக யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை!! அருண் ஜேட்லி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சகத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக அமெரிக்க நிதியியல் வல்லுனர் அரவிந்த் சுப்பிரமணியன் அவர்களை நியமிக்க உள்ளதாக செய்திகள் ஊடகங்களில் பரவி வந்தது. ஆனால் இன்று நிதியமைச்சகம் மிகவும் தெளிவாக, இப்பதவிக்கு இன்னும் யாரையும் தேர்வு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

 

மேலும் இப்பதவிக்கு பல நிதியியல் வல்லுனர்களை நிதியமைச்சர் அருண் ஜேட்லி சந்தித்ததாகவும், சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இன்னும் இப்பதவிக்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ராகுராம் ராஜன்

ராகுராம் ராஜன்

இதற்கு முன் இப்பதவியில் தற்போதைய ரிசர்வ் வங்கி ரகுராம் ராஜன் இருந்தார், இவர் கவர்னர் பதவிக்கு மாற்றிய பிறகு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த இடம் காலியாக தான் உள்ளது.

அரவிந்த் சுப்பிரமணியன்

அரவிந்த் சுப்பிரமணியன்

கடந்த வாரம் நிதியமைச்சகம் அமெரிக்காவில் நிதியியல் வல்லுனர்களில் முக்கியமான ஒருவராக திகழும் அரவிந்த் சுப்பிரமணியன் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் எனவும் கூடிய விரைவில் அவர் அலுவலகத்திற்கு வர உள்ளார் எனவும் தகவல் பரவியது குறிப்பிடதக்கது.

யார் இந்த அரவிந்த் சுப்பிரமணியன்??

யார் இந்த அரவிந்த் சுப்பிரமணியன்??

இவர் ஐஐஎம்-அகமதாபாத் கல்லூரியில் தனது பட்டபடிப்பை முடித்தார், வாஷிங்டன் நகரத்தை சேர்ந்த பீட்டர்சன் இண்ஸ்டியூட் ஃபார் இண்டர்நேஷ்னல் எக்னாமிக்ஸ் நிறுவனத்தின் டென்னீஸ் வெதர்ஸ்டோனின் மூத்த உதவியாளர் ஆவார்.

இண்டர்வியூ
 

இண்டர்வியூ

மேலும் இப்பதவிக்கான நேர்முகத் தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் இக்காலி இடத்தை தகுந்த நபரை தேர்ந்தெடுக்கப்படும் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No decision on appointment of Chief Economic Advisor

The Finance Ministry has not yet decided on the name of the new Chief Economic Advisor (CEA).
Story first published: Tuesday, August 26, 2014, 18:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X