அணுஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தை: இரண்டாவது முறை ஜப்பானுக்கு பறக்கும் மோடி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை 5 நாள் சுற்றுப்பயணமாக இரண்டாவது முறை ஜப்பான் செல்கிறார். இப்பயணத்தில் இந்தியாவுக்கும் ஐப்பானுக்கும் இடையே அணுஆயுத ஒப்பந்தத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனே மோடி அவர்கள் செல்கிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா 85 பில்லியன் டாலர் மதிப்புடைய சந்தையில் தனது முதலீட்டை துவங்கும் முதல் படியாக இருக்கும்.

 

மேலும் இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்தேறினால் ஆசியா நாடுகளில் சீனாவுக்கு நிகராக மற்றொரு நாடாக இந்தியா உருவெடுக்கும்.

அணுஆயுத ஒப்பந்தம்...

அணுஆயுத ஒப்பந்தம்...

கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கவுடனான அணுஆயுத ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ராணுவ அணுஆயத திட்டத்திற்காக இந்தியா அமெரிக்காவில் இருந்து எரிபொருள் மற்றும் தொழிற்நுட்பத்தை இறக்குமதி செய்ய வழிவகுத்தது. அதை தொடர்ந்து இப்போது ஜப்பானுடனான ஒப்பந்தம் வருகிறது.

ஆனால் ஒரு கண்டிஷன்...

ஆனால் ஒரு கண்டிஷன்...

இந்நிலையில் ஜப்பான் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் யாவும் ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தக் கூடாது என்றும், தேவைப்படும் போது இதுக்குறித்து ஆய்வு நடத்தவும், அணுஆயுத சோதனைகள் எதுவும் நடத்த கூடாது என பல கண்டிஷன்களுக்கு உறுதியளிக்க வேண்டுகிறது.

இந்தியாவின் மனநிலை...
 

இந்தியாவின் மனநிலை...

இந்தியாவை பொறுத்த வரை அணுஆயுத ஏந்திய அண்டை நாடான சீனா மற்றும் பாகிஸ்தான் ஒப்பிடும் போது இந்தியாவிடம் எதுவுமே இல்லை.. இந்நிலையில் ஜப்பான் நாட்டின் கண்டிப்புகளை சமாளித்தும் மற்றும் இந்தியா ராணுவத்திற்கு சாதகமான நிலையை உருவாக்க பிரதமரின் இந்த பயணம் உறுதுணையாக இருக்கும்.

ஒப்பந்தம் கையெழுத்து ஆகாது...

ஒப்பந்தம் கையெழுத்து ஆகாது...

மோடி அவர்களின் இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட மாட்டார்கள் என டிவி டோக்கியோ தெரிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் எனவும் இந்த செய்தி தெரிவித்தது. மேலும் கடந்த ஒரு மாதமாக இந்த ஒப்பந்த பற்றிய பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடதக்கது.

ஜப்பான்

ஜப்பான்

இந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தலைமையிலான அரசு சீனாவிற்கு எதிராக வலிமைபெற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உடன் தொடர்ப்பு வைத்துக்கொள்ள முனைகிறது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்திய அணுஆயுத ஒப்பந்தத்தை செய்ய முயல்கிறது.

உள்கட்டமைப்பு

உள்கட்டமைப்பு

அணுஆயுத ஒப்பந்தத்தை தாண்டி இரு நாடுகளுக்கிடையே உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டங்கள் பல தீட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமான ஒன்று அதிவேக புல்லட் ரயில்.

ஜப்பானுக்கு பயம்...

ஜப்பானுக்கு பயம்...

2011ஆம் நடந்த புகுஷிமா நகரில் நடந்த அணு கசிவை கண்டு மிகவும் பயந்துள்ளது, இந்த சம்பவத்தை தொடந்து அணுஆயத ஒப்பந்தத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த பயம் தனக்குரியதல்ல பிற நாட்டு மக்களின் மீதுள்ள அக்கறை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi eyes breakthrough nuclear pact on Japan trip

India is hoping to win Japanese backing for a nuclear energy pact during a visit by Prime Minister Narendra Modi, and lure investment into its $85 billion market while addressing Japan's concern about nuclear proliferation.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X