இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: "இன்ஜினியரிங் படிப்பு எனது கனவு, என்னால் தான் எட்டிப்பிடிக்க முடியவில்லை.. என்னுடைய மகன் என் கனவை நிறைவேற்றுவான்", "நான் கஷ்டப்படுவது போல் என் மகன் கஷ்டப்படக் கூடாது" என பல டயலாக்குகள் தந்தைமார்கள் கூறிவது வழக்கம். ஆனால் பல கனவுகளுடன், இன்ஜினியரிங் பட்டம் பெற்று வரும் பட்டதாரிகளின் இன்றைய நிலை என்ன???

 

நான்கு வருடம் முட்டி மோதி பட்டம் பெற்ற இன்ஜினியரிங் மாணவனின் சராசரி சம்பளம், பள்ளிக் கல்வி கூட முடிக்காத ஒரு எலக்டிரிஷியனின் மாத சம்பளத்தை விட குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை. தொடர்ந்து படிங்க பல அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் உள்ளே காத்துக்கிடக்கிறது.

சம்பள வித்தியாசம்

சம்பள வித்தியாசம்

இந்திய நகரங்களில் பணிபுரியும் இன்றைய தலைமுறையினர்களில் அனுபவமற்ற எலக்டிரிஷியனின் மாத சம்பளம் 11,300 ரூபாய். ஆனால் இன்ஜினியரிங் முடித்து விட்டு டெஸ்க்டாப் இன்ஜினியர் ஆக பணிபுரிபவருக்கு வெறும் 3,500 ரூபாய் சம்பளம். என்ன கொடுமை சார் இது...

புள்ளி விபரம்

புள்ளி விபரம்

இத்தகவலை எந்த ஒரு குப்பனும் சுப்பனும் தயரித்தது அல்ல, நாட்டில் உயர்ந்து வரும் பட்டதாரிகளுக்கு வேலை அளிக்கும் ஒரு மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் அளித்தது.

அனுபவம் கிடைத்தால் போது...
 

அனுபவம் கிடைத்தால் போது...

இன்றைய நிலையில் அனுபவம் கிடைத்தாலும் இன்ஜினியரிங் பட்டதாரிக்கும் எலக்டிரிஷியனுக்கும் சம்பளத்தில் பெரிய அளவிலான வித்தியாசம் இல்லை என்று டீம்லீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐடி துறையில் சராசரியாக 5 வருடத்தில் 19,000 ரூபாய்,8 வருடத்தில் 30,000 ரூபாய் சம்பளம் பெற முடியும். இதே காலகட்டத்தில் எலக்டிரிஷியன் 26,000 மாத வருமானமாக பெறுகிறான் என இந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐடி பிரஷ்ர்கள்

ஐடி பிரஷ்ர்கள்

ஏன் இந்த நிலை??

ஐடி துறை

ஐடி துறை

இந்தியாவில் ஐடி துறை வளரத் துவங்கி சுமார் 15 வருடங்கள் ஆகிறது, இந்நிலையில் இங்கு தேவைக்கு அதிகமான ஆட்கள் உள்ளதாலும், பட்டதாரிகளின் அறிவுத் திறன் மற்றும் நிறுவன அளவீடு வேறுப்பட்டுள்ளதால் இவர்களுக்கு சம்பளம் அதிரடியாக குறைந்துள்ளது.

ஆட்கள் பற்றாக்குறை..

ஆட்கள் பற்றாக்குறை..

ஆட்கள் பற்றாக்குறை.. ஐடி துறையில் இல்ல பாஸ். டீம்லீஸ் நிறுவனத்தின் உயர் தலைவர் சக்ரவர்த்தி கூறுகையில் நிறுவனத்திற்கு 100 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வேண்டுமானல் எளிதாக பெற்று விட முடிகிறது. இதே நிலையில் அதே நிறுவனத்திற்கு 10 எலக்டிரிஷியன் வேண்டுமானல் 2 நபர்களை பிடிப்பதே குதிரை கொம்பாக உள்ளது என அவர் தெரிவித்தார்.

இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்ன செய்கிறார்கள்??

இன்ஜினியரிங் பட்டதாரிகள் என்ன செய்கிறார்கள்??

இந்நிலையில் இன்ஜினியரிங் முடித்த பல பட்டதாரிகள் தங்களுக்கான வேலையில் இல்லாமல் பல தரப்பட்ட வேலையில் பல்லை கடித்துக்கொண்டு வேலை செய்கின்றனர். அதுபோக இன்று எந்த படிப்பை படித்தாலும் ஐடி நிறுவனத்தில் சேர்கின்றனர், அட பேஷன் டெக்னாலஜி முடித்தவர்கள் எல்லாம் இன்போசிஸ், சிடிஎஸ் நிறுவனத்தல இருக்காங்க பாஸ்..

காசு, பணம், துட்டு...

காசு, பணம், துட்டு...

மேலும் பலருக்கு தன் படிப்புக்கான வேலை கிடைத்தாலும் பெற்றோர்கள் வற்புறுத்தல் காரணமாக ஐடி துறையில் சேர்ந்து விடுகின்றனர். இதில் தப்பித்த சில பட்டதாரிகள் தனக்கான வேலை செய்யும்போது அவர்களின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவாக இருக்கும்.. முக்கியமாக வாழ்வில் நிம்மதி இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

In current job scenario an electrician earns as much as an engineer

In a country where engineering degrees are chased by many an aspirant, salary statistics thrown up by a leading staffing solutions company come as an eye-opener.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X