சேவையில் மாற்றம் இல்லை.. பெயரில் மட்டுமே மாற்றம்!! இந்தியாவின் புதிய வங்கி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: 27 நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி உரிமத்தை பெற்ற பந்தன் பைனான்சியல் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் எளிமையான வங்கி சேவை அளிக்க திட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் டோர்-ஸ்டெப் பாங்கிங் சேவை கூட அளிக்க திட்டமிட்டுள்ளது.

 

அது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர் சந்திர சேகர் கோஷ் கூறுகையில், வாடிக்கையாளர் சேவையில் கூடுதல் வசதிகள் இருக்கமே தவிற குறைபாடு இருக்காது என கூறினார்.

பெயர் மாற்றம்...

பெயர் மாற்றம்...

வாடிக்கையாளர்களுக்கு ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் அளிக்க விரும்புகிறோம், இனி நிறுவனத்தின் பெயர் பந்தன் பைனான்சியல் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட் இல்லை, பந்தன் பாங்க் பிரைவேட் லிமிடெட் என அவர் குறிப்பிட்டார்.

கடனாளிகள்

கடனாளிகள்

இந்நிறுவனம் அதுவரை சுமார் 58,16,529 பேருக்கு கடன் வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் கிழக்கிந்திய நாடுகள், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் முக்கியதுவம் அளித்து வருகிறது. மேலும் ஒரு மாதத்திற்கு 1000 கோடி ரூபாய் வரை கடன் வழங்கி வருவது குறிப்பிடதக்கது.

உலக வங்கி
 

உலக வங்கி

ரூ.94 கோடி மதிப்புள்ள இந்த பந்தன் பாங்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உலக வங்கியின் கிளை நிறுவனமான ஐ.எஃப்.சி சுமார் 11 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஐ.எஃப்.சி இந்நிறுவனத்தில் சுமார் 160 கோடி ரூபாய் புல்லட் லோன் கொடுத்துள்ளது.

 600 கிளைகள்

600 கிளைகள்

மேலும் இந்நிறுவனம் தற்போது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வங்கியாக செயல்பட 600 பெரும் கிளை மற்றும் 2016 குறு வங்கிகளை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

மக்கள் தொகை

மக்கள் தொகை

மேலும் வங்கி கிளைகள் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே அமையும் எனவும் குறு நிறுவன கிளை அனைத்தும் கிராம பகுதிகளில் மட்டும் இருக்கும் என இந்நிறுவன தலைவர் கோஷ் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்நிறுவனம் தற்போது 200 பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்று வருகிறது, இதற்காக சுமார் 35,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளது இந்நிறுவனம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Only name will change for Bandhan, says Ghosh

There will be no change in customers or the services that we provide to them, although new services will be added as we emerge as a banking company. For our existing clients, it will be only a change in name from Bandhan Financial Services Pvt. Ltd. to Bandhan Bank Pvt. Ltd.
Story first published: Saturday, September 20, 2014, 10:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X