இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்!! 11.3கோடி மக்கள் பாதிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்த போட்டி மிகுந்த உலகத்தில் படித்த படிப்புக்கு வேலை கிடைத்துவிட்டால் அதுவே மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் இவ்வேளையில் இந்தியாவில் சுமார் 11 கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வருவதாக மத்திய அரசு ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் 7 கோடி வீடுகள் பாதித்துள்ளது, இந்த எண்ணிகை மொத்த இந்திய குடியிருப்புகளில் 28 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது.

 

மேலும் இந்த கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை வைத்து உருவாக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேலையின்மையின் சாதனை

வேலையின்மையின் சாதனை

கடந்த 20 வருடத்தில் இந்தியா அதிகளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை இந்த வருடம் பதிவு செய்துள்ளது. 2001ஆம் ஆண்டு 23சதவீதம் வேலையின்மையை சந்தித்த இந்தியா தற்போது 28 சதவீதம் பதிவு செய்துள்ளது கவலைக்குரியது.

சட்டதிட்டங்கள்

சட்டதிட்டங்கள்

மேலும் கடந்த 3 வருடமாக இந்தியவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பணி தடைப்படுமாறு எந்த ஒரு சட்டதிட்டங்களும் அமையவில்லை. இந்நிலையிலும் வேலையின்மையின் சதவீதம் குறைந்திருந்துள்ளது.

20 சதவீதம் இளைஞர்கள்

20 சதவீதம் இளைஞர்கள்

சென்செக்ஸ் 2011ஆம் ஆண்டின் தகவல் படி 15-24 வயதிற்கு உட்பட்ட சுமார் 20 சதவீத மக்கள் வேலையில்லாமல் உள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 20 சதவீதம் என்றால் சிறிய எண்ணிக்கை என்று நினைத்துவிட வேண்டாம், இது சுமார் 4.7 கோடி மக்கள் கொண்டது.

அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்கள்
 

அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்கள்

இந்தியாவில் மாநில வாரியக பார்க்கும் போது மேற்கு வங்காளம் (54%) ஜம்மு காஷ்மீர் (48%), ஜார்கண்ட் (42%), கேரளா (42%), பீகார் (35%), ஒடிசா (39%) அசாம் (38%) ஆகிய மாநிலங்கள் அதிகளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.

தமிழ்நாடு தப்பித்தது

தமிழ்நாடு தப்பித்தது

வேலையின்மை பட்டியலில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்கள் கடைசி இடத்தில் உள்ளது. இம்மாநிலங்களில் வேலையின்மை வெறும் 14 சதவீதம் மட்டுமே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 14 சதவீதத்திற்கே இப்படினா 30 40 சதவீதத்திற்கு எல்லாம் நாடு என்ன ஆகும். முடியலடா சாமி...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Army of jobseekers now 11cr-strong

Over 113 million persons were "seeking or available for work", that is, they were unemployed, according to Census 2011 data released today. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X