அமெரிக்காவில் கூகிள், போயிங், ஐபிஎம் சிஇஓ-களுடன் சந்திப்பு!! பிரதமர் மோடி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2013ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு செல்ல விசா மறுக்கப்பட்ட முன்னாள் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, பாரத பிரதமர் ஆன அடுத்த சில நாட்களிலே தடை விலக்கப்பட்டு அமெரிக்கவிற்கு அழைப்பு விடுத்தது அந்நாட்டு அரசு.

 

இந்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். முதல் கட்டமாக அங்கு பார்ச்சூன் 500 நிறுவனங்களில், உலக புகழ்பெற்ற 17 நிறுவன தலைவர்களை தனித்தனியாக சந்திக்க உள்ளார்.

17 நிறுவனங்கள்

17 நிறுவனங்கள்

மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தில் மிக முக்கியமாக கருதப்படும் இந்த 17 நிறுவன தலைவர்கள் சந்திப்பில் கூகிள், போயிங், ஐபிஎம், கோல்ட்மேன் சாக்ஸ், மாஸ்டர்கார்டு, பெப்சி, கார்லைல் குழு, கார்கில் குழு, சிட்டி குரூப், மெர்க், கேட்டர்பில்லர், வார்பர்க் பிங்கஸ் மற்றும் ஹோஸ்பிரா ஆகிய நிறுவனங்களின் தலைவர்களை இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திக்க உள்ளார்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

இந்த நேருக்கு நேர் சந்திப்பில் 17 நிறுவன தலைவர்களுடன் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி, பெரும் கட்டுமானப் பணிகள் மற்றும் நகரமயமாக்கல் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெரும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

உற்பத்தி வளர்ச்சி

உற்பத்தி வளர்ச்சி

மேலும் இச்சந்திப்பின் மூலம் நாட்டின் உற்பத்தி வளர்ச்சி சுமார் 10 சதவீதம் வளரும் வகையில் முதலீடும், தொழிற்நுட்ப உதவியும் பெற்ற திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

புதிய தொழிற்சாலை
 

புதிய தொழிற்சாலை

மேலும் நாட்டில் புதிய தொழிற்சாலைகளை அமைக்க வலியுறுத்தும் வகையில் இச்சந்திப்பு அமையும் எனவும் மத்திய தெரிவித்துள்ளது. இந்திரா நூயி தலைமை வகிக்கும் பெப்சி நிறுவனம் இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் பிற நிறுவனங்களும் இந்தியாவில் தனது தொழில்வளர்ச்சியை பெருக்க வேண்டும் என வலியுறுத்தவே இந்த திட்டம்.

எதற்கு விசா தடை விதிக்கப்பட்டது??

எதற்கு விசா தடை விதிக்கப்பட்டது??

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் மோடி அவர்களுக்கு தொடர்புடையதாகவும், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் உள்ளதாகவும் என பல பொய்யான மற்றும் மெய்யான காரணங்களை காட்டி அமெரிக்கா அரசு அவருக்கு விசா வழங்க மறுத்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi to meet CEOs of Fortune 500 companies like Google, Boeing, IBM, during US visit

Prime Minister Narendra Modi will meet CEOs of top Fortune 500 companies like Google, Boeing, IBM, Goldman Sachs, MasterCard and Pepsi during his visit to the US later this week.
Story first published: Wednesday, September 24, 2014, 12:18 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X