கங்கை நதியை சுத்தம் செய்தால் வருமான வரியில் சலுகை!! மத்திய அரசின் புதிய ஆஃபர்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான கங்கை நிதி, தற்போது மிகவும் சுத்தமற்ற நிலையில் உள்ளது. இதை சுத்தம் செய்யும் வண்ணம் மத்திய ஒரு புதிய திட்டத்தை வகுத்தது இதன் பெயர் "நமாமி கங்கா". இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கங்கை நதியை சுத்தம் செய்வதற்கான நிதியை சேமிக்க இத்திட்டத்தின் நிர்வாக அமைப்பு "கிளீன் கங்கா பண்ட்" என்ற நிதி அமைப்பை உருவாக்கியுள்ளது.

 

கிளீன் கங்கா பண்ட் என்ற திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் தனிநபர் வருமான வரி சில விலக்குகளை பெற்றலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்ட ஒப்பதல்

திட்ட ஒப்பதல்

கிளீன் கங்கா பண்ட் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இதில் இந்தியா மக்கள், என்.ஆர்.ஐ மற்றும் வெளிநாட்டினர் என அனைவரும் நிதி உதவி செய்ய முடியும்.

ரவி சங்கர் பிரசாத்

ரவி சங்கர் பிரசாத்

இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் இந்திய மக்கள், என்.ஆர்.ஐ மற்றும் வெளிநாட்டினர் என அனைவரும் வருமான வரியில் சில விலக்குகளை பெறலாம் என மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

கிளீன் கங்கா பண்ட்

கிளீன் கங்கா பண்ட்

இத்திட்டம் மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், மேலும் இத்திட்டத்திற்கு அருண் ஜேட்லி தலைமையிலான நிதியமைச்சகம் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் இப்பணிகளை துவக்க போதுமான நிதிகள் இன்னும் கிடைக்கவில்லை. பணிகள் துவக்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

முக்கிய பணிகள்
 

முக்கிய பணிகள்

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கபெரும் நிதிகள், கங்கை நதியை அமைத்துள்ள பகுதிகளில் விவசாயம் மேம்படுத்தவும், கழிவு அகற்றுவதில் மேம்பாடு, கால்நடைகளுக்கான அமைவிடம் அமைத்தல் போன்ற பல திட்டங்கள் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Get Income Tax benefit through contribution for clean Ganga mission

You can get tax relief by contributing towards the Clean Ganga project. The Government has announced setting up a Clean Ganga Fund (CGF) to help in the Integrated Ganga Conservation Mission called ‘Namami Gange.’
Story first published: Thursday, September 25, 2014, 17:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X