அலிபாபா வங்கி துவங்கிவிட்டார்!! 40 திருடர்கள் என்ன செய்ய போராங்க...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெய்ஜிங்: ஆன்லைன் வர்த்தகத்தில் ஈபே மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தும் வரும் அலிபாபா நியூயீார்க் பங்குச்சந்தையில் முதல் நாளிலேயே 25 பில்லியன் டாலர் பெற்று ஒரு புரட்சியை செய்தது. இந்நிலையில் அலிபாபா நிறுவனம் மக்களுக்கு வங்கி சேவை அளிக்க தனியார் வங்கியை அமைக்க விண்ணப்பம் அளித்திருந்தது.

 

நியூயார்க் பங்குசந்தையில் கிடைக்க வெற்றுக்கு பரிசளிக்கும் வகையில் சீனாவில் தனியார் வங்கி சேவை அளிக்க இந்நிறுவனத்திருக்கும் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது.

புதிய வங்கி

புதிய வங்கி

அலிபாபா நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஜெஜியாங் ஆன்ட் ஸ்மால் மற்றும் மைக்ரோ பைனான்சியல் சர்விசஸ் குருப் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய வங்கியை அமைக்கிறது. இவ்வங்கியில் இரு நிறுவனங்களும் சுமார் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.

வங்கிச் சேவையில் அலிபாபா

வங்கிச் சேவையில் அலிபாபா

ஆன்லைன் வங்கி பண பரிமாற்றம் மற்றும் சொத்து மேம்பாடுகளில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அனுபவம் இருப்பதால் இந்நிறுவனம் மக்களுக்கும் நிறைவான மற்றும் முழுமையான சேவை வழங்கப்படும் சீன அரசு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்திற்கு ஒரு உந்து சக்தி
 

பொருளாதாரத்திற்கு ஒரு உந்து சக்தி

சீனாவில் வங்கித்துறையில் அல்லாத ஒரு நிறுவனம் வங்கி அமைப்பது இதுதான் முதல் முறை, மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் வங்கிகள் பெரும் உந்து சக்தியாக இருக்கும் எனவும், வங்கித்துறையில் ஒரு போட்டித்தன்மையை உருவாக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

முதலீடு

முதலீடு

வங்கியை அமைப்பதன் மூலம் இந்நிறுவனம் பெரும் முதலீட்டை பெரும். இதனை கொண்டு அலிபாபா நிறுவனம் உலகநாடுகளில் இதன் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்கவும், வரிவுப்படுத்தவும் உதவும்.

ஜாக் மா

ஜாக் மா

அலிபாபா நிறுவனம் நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடபட்டதன் விளைவாக 25 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் சீனாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba gets approval to establish private bank in China

China’s e-commerce giant Alibaba, which completed the world’s largest initial public offering ever in September, 2014, has won approval from authorities here to establish a private bank as it diversify into financial services.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X