வரி வசூலில் மகாராஷ்டிரா மாநிலம் தான் டாப்பு... தமிழ்நாடு??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுமார் 500 பில்லியன் டாலர் வரியிலிருந்து வருமானமாக கிடைக்கின்றன. இதில் எந்த மாநிலத்திலிருந்து அதிகமான வரமானம் பெறப்படுகிறது என்று தெரியுமா?

பொதுவாக மாநிலங்களுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித் தருவது அம்மாநிலத்தின் விற்பனை வரியாகும்.

இக்கட்டுரையில் 2012-2015-ம் ஆண்டுகளில் திட்டமிடப்பட்டிருக்கும் வரி வருமான அடிப்படையில் இந்திய மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 13-வது நிதிக்குழுவின் இந்த வரிசையை யாஹூ நிறுவனம் ஒருங்கிணைத்துள்ளது.

மகாராஷ்டிரா – 451,000 கோடி

மகாராஷ்டிரா – 451,000 கோடி

பொது விற்பனை வரி மற்றும் சில்லறை விற்பனை வரி ஆகியவற்றை உள்ளடக்கிய விற்பனை வரிகளே மாகராஷ்டிர மாநிலத்தின் முக்கியமான நிதி ஆதாரங்களாகும். 1946-ம் ஆண்டில் முந்தைய பம்பாய் மாகாணத்தில் விற்பனை வரி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. பின்வந்த காலங்களில் இந்த வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

ஆந்திரப் பிரதேசம் - 323,400 கோடி

ஆந்திரப் பிரதேசம் - 323,400 கோடி

சமீபத்திய தெலுங்கானா பிரிவினைக்குப் பின்னர், ஆந்திராவில் ஆச்சரியப்படும் வகையில் வரி வருமானம் கிடைத்துள்ளது. ஜீன் 2-ம் தேதியிலிருந்து ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கென தனித்தனியான வரி கணக்குகள் நடைமுறைக்கு வந்திருந்தன. அனைத்து மதிப்பு கூட்டு வரி முகவர்களும், தங்களுடைய மாநிலங்களுக்கு வரிகளை செலுத்துமாறு வழிகாட்டப் பட்டார்கள்.

உத்திரப் பிரதேசம் - 296,400 கோடி

உத்திரப் பிரதேசம் - 296,400 கோடி

இந்தியாவின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் உத்திரப் பிரதேசம் அதன் சுற்றுலா மற்றும் மதத் தலங்களக்காகப் புகழ் பெற்ற மாநிலமாகும். இம்மாநிலத்தின் வருமானத்தில் பெரும்பகுதியை சுற்றுலாத் துறையும், சர்க்கரை ஆலைகளும் ஈட்டித் தருகின்றன.

ஒரு காலத்தில் மாநில அரசின் பணியாணர்களின் ஊதியத்தைக் கூட வழங்க முடியாத அவல நிலையில் இம்மாநிலத்தின் வருமானம் இருந்தது. இன்றோ மாற்றத்திற்கான அற்புதமான அத்தியாயத்தை உத்திரப் பிரதேசம் எழுதியுள்ளது.

 

தமிழ் நாடு – 273,400 கோடி

தமிழ் நாடு – 273,400 கோடி

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் மிகவும் நகர்மயம் ஆக்கப்பட்ட மாநிலமாக தமிழ் நாடு உள்ளது. இம்மாநிலத்தின் மக்களில் 9.6 சதவீதம் பேர் நகரப்பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மொத்தம் 6 சதவீதத்தினரே நகர்ப்புறங்களில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில், சேவைத் துறையின் மூலமாகவே 45 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் நிகழ்ந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து 34 சதவீதத்துடன் உற்பத்தி துறையும், 21 சதவீதத்துடன் வேளாண்மைத் துறையும் வருகின்றன. கட்டுமானத்துறைக்கு ஆதரவாக 113 தொழில் பூங்காக்களையும் மற்றும் எஸ்டேட்களையும் கொண்டு வளர்ச்சியடைந்த களங்களை கொடுத்து வரும் மாநிலமாக தமிழ் நாடு உள்ளது.

 

கர்நாடகா – 252,600 கோடி

கர்நாடகா – 252,600 கோடி

வரி வசூலிப்பதில் திறமையைக் காட்டியதன் மூலமாக கர்நாடக அரசின் வருமானம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் வரி வசூல் செய்வது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 17 சதவீதம் அதிகரித்து, சுமார் 23,242 கோடிகள் வருமானமாக பெறப்பட்டுள்ளன.

குஜராத் - 179,600 கோடி

குஜராத் - 179,600 கோடி

இந்தியாவின் மிகவும் வளர்ந்த நாடாகவும் மற்றும் முன்னணி வளர்ச்சி மாதிரி மாநிலமாகவும் குஜராத் போற்றப்பட்டு வருகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்திற்கு, நாட்டிலேயே மிகவும் நீளமான 1600 கிமீ நீளமுள்ள கடற்கரையை கொண்டிருப்பதும் பெருமையாக உள்ளது. இதன் மூலம் கிடைத்த அற்புதமான கட்டுமான வசதிகளை பெட்ரோலியம் மற்றும் கல்வித் துறைகள் வாகாக பயன்படுத்திக் கொண்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலன வெளிநாடு வாழ் இந்தியர்களின் தாயகமாக குஜராத் உள்ளது. இம்மாநிலத்தில் தொழில் துறை, மின்சாரத் துறை, துறைமுகம், சாலை, வேளாண்மை மற்றும் கனிமம் ஆகிய முக்கியமான துறைகளுக்கு கொள்கைகளில் முன்னுரிமை தரப்படுகின்றன.

 

பஞ்சாப் - 118,000 கோடி

பஞ்சாப் - 118,000 கோடி

நாட்டின் நிதி கொள்கையில், மாநிலங்களுக்கு சொந்தமான வரி மற்றம் வரியல்லாத வருமானம், மத்திய அரசிடமிருந்து மாற்றப்பட்டு வரும் வருமானம் மற்றும் கடன்கள் ஆகிய 3 பகுதிகள் உள்ளன.

மேற்கு வங்காளம் - 169,900 கோடி

மேற்கு வங்காளம் - 169,900 கோடி

வேளாண்மை துறையை மிகவும் நம்பியிருக்கிறது மேற்கு வங்க மாநிலம். இது மேற்கு வங்க மாநிலத்திற்கு முதன்மையான வருமானம் தரும் துறையாகவும் மற்றும் அம்மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் நம்பியிருக்கும் துறையாகவும் வேளாண்மைத் துறை உள்ளது. சிறு தொழில் துறையினரின் வருமானமும் மற்றும் பாரம்பரிய அமைப்புகளின் ஆதிக்கமும் நிறைந்த மாநிலமாக மேற்கு வங்காளம் உள்ளது.

ராஜஸ்தான் - 150,741 கோடி

ராஜஸ்தான் - 150,741 கோடி

பரப்பளவைப் பொறுத்த வரையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் இராஜஸ்தான் 'இராஜாக்களின் நிலம் (Land of Kings)' என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பரப்பளவில் 10.4 சதவீத நிலப்பகுதியை பெற்றுள்ள இம்மாநிலம், இந்தியாவின் மொத்த வருமானத்தில் 150,741 கோடிகளை தன் பங்காக கொடுத்து வருகிறது.

இந்தியாவில், சமையல் எண்ணைய் உற்பத்தியில் முதலிடத்தையும், எண்ணைய் வித்துக்கள் மற்றும் பாலியஸ்டர் ஃபைபர் உற்பத்தியில் 2-ம் இடத்தையும் இராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது. மேலும், சிமெண்ட் உற்பத்தியிலும் 2-ம் இடத்தை இராஜஸ்தான் பெற்றுள்ளது.

 

ஹரியான – 136,291 கோடி

ஹரியான – 136,291 கோடி

இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக ஹரியான கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், ஹரியானாவின் குர்கான் பகுதி எல்லையில்லாத வளர்ச்சியைப் பெற்றுள்ளது நிதர்சன உண்மை.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாகவும் மற்றும் மாருதி சுஸுகி, ஹீரோ மோடோ கார்ப் மற்றும் டி.எல்.எஃப் போன்ற பெருநிறுவனங்கள் உள்ள இடமாகவும் ஹரியானா உளளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Indian States That Score Billions In The Form Of Tax Revenues

India collects approximately $500 billion in the form of tax revenues from all the states. So, which states contribute the most to the collection of taxation and other government revenues? Surely, sales tax continues to be the state's largest source of income. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X