இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு தொப்புள் கொடி அறுந்தது!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் சாப்ட்வேர் துறை வளரத் துவங்கிய சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுசும் பெருசுமாக பல நிறுவனங்கள் துவங்கப்பட்டது. ஆனால் வாடிக்கையாளர் பிரச்சனை, ஆட்கள் பற்றாக்குறை, பிராஜெக்ட் பிரச்சனை என்ற பல காரணங்களால் நிறுவனங்கள் முடப்பட்டு வந்த நிலையில் பெங்களுரில் ஒரு நிறுவனம் அமைதியாகவும், நிதானமாகவும் வளர்ந்து வந்தது.

 

இந்த நிறுவனத்திற்கு பெயர் தான் இன்போசிஸ், சரி அதுக்கும் தலைப்புக்கு என்ன சம்பந்தம் தானே கேட்கிறிங்க. இருக்கு தொடர்ந்து படிங்க

தொப்புள் கொடி

தொப்புள் கொடி

1981ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இன்போசிஸ் நிறுவனத்தில் 33 வருட இரவு பகல் பாராமல் உழைத்த நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான நாராயணமூர்த்தி இன்று முதல் நிறுவன பொறுப்புகளில் இருந்து முழுமையாக விலகுகிறார். இதன் பின் அவர் நிறுவனத்தின் உயர்மட்ட குழுவில் non-Executive Chairman ஆக மட்டுமே இருப்பார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

இன்போசிஸ் நிர்வாகம் நாராயணமூர்த்தி அவர்களை நிறுவனத்தின் சேர்மன் ஆக மட்டும் இருக்கவும் பரிந்துறை செய்தது, ஆனால் தன் முடிவில் மாற்றமில்லை எனவும் நிறுவனத்தின் வளர்ச்சியை வெளியே இருந்து தான் பார்க்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இனி நிறுவனத்தின் அனைத்து மட்ட நிலையில் இருந்தும் அவர் விலகுகிறார்.

கடைசி நிறுவனர்

கடைசி நிறுவனர்

மேலும் இந்நிறுவன பெறுப்புகளில் இருக்கும் கடைசி நிறுவனரான கிரிஸ் கோபால கிருஷ்ணன் நிறுவனத்தை விட்டு அக்டோபர் 10ஆம் தேதி விலகினார்.

சொத்து மதிப்பு
 

சொத்து மதிப்பு

இன்போசிஸ் நிறுவனர்களான நாராயணமூர்த்தி, நந்தன் நிலேகனி, கோபாலகிருஷ்ணன், ஷிபுலால், தினேஷ் மற்றும் ராகவன் ஆகியோரிடம் இந்நிறுவனத்தின் 15.94 சதவீத பங்குகள் வைத்துள்ளனர். இதில் நாராயண மூர்த்தி குடும்பத்தினர் மட்டும் 4.47 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

வாரிசுகள் ராஜியம்

வாரிசுகள் ராஜியம்

மேலும் இந்நிறுவனத்தின் அனைத்து நிறுவனர்களின் அடுத்த தலைமுறையினர்கள் இந்நிறுவனத்தின் promoterகளாக உள்ளனர். இந்தியாவில் பல நிறுவனங்கள் குடும்ப வியாபாரமாகவே இருக்கிறது. (சில இடங்களில் குடும்ப அரசியலாகவும் இருக்கிறது)

நிறுவனர்கள் குழு

நிறுவனர்கள் குழு

இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் அனைவரும் நிறுவன பொறுப்புகளில் இருந்து வெளியேறிய நிலையில், நிறுவனர் குழு இன்போசிஸ் நிர்வாக குழுவிடம் promoterகளில் நிலை மற்றும் நிர்வாக பொறுப்புகள் குறித்து நிலைபாட்டை கேட்டுள்ளனர்.

அடுத்தது என்ன செய்ய திட்டம்..

அடுத்தது என்ன செய்ய திட்டம்..

மேலும் நிறுவனர்கள் எல்லாம் ரியல் எஸ்டேட், ஹோட்டல், ஈகாமர்ஸ், கல்வி என பல துறைகளில் இறங்கியுள்ளனர். அடுத்த 5 முதல் 10 வருடங்களில் இந்நிறுவனம் விஷால் சிக்கா தலைமையில் இல்லாமல் இக்குடும்ப கட்டுப்பாட்டில் வந்தாலும் சந்தேகமில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narayana Murthy declines chairman emeritus post

Infosys founder NR Narayana Murthy has declined the position of chairman emeritus, completely cutting the umbilical cord with the path-breaking, 33-year-old IT company that he founded in 1981.
Story first published: Saturday, October 11, 2014, 12:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X