மீண்டும் இன்போசிஸ் நிறுவனத்தில் இணையும் முன்னாள் பணியாளர்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விஷால் சிக்கா, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அனைத்து அதிகாரிகளுக்கும் மீண்டும் நிறுவனத்தில் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்தார். இவரது அழைப்பை ஏற்றும் தற்போது 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீண்டும் நிறுவனத்தில் வந்து இணைய உள்ளனர்.

 

சிக்காவின் இந்த முயற்சி வரவேற்க கூடியது.. ஏன்னென்றால் புதிய பணியாளர்களை சேர்த்து நிறுவனத்துடன் இணைந்து செயல் பட குறைந்தது 2 அல்லது 3 மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் பழைய பணியாளர்கள் இணையும் போது காலதாமதம் இருக்காது. மேலும் இவர்களின் அவுட்புட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.

100 பணியாளர்கள் வந்து சேரும் அளவிற்கு அப்படி என்ன மெயில் அனுப்பினார் சிக்கா??? வாங்க பார்போம்..

புதிய துவக்கம்

புதிய துவக்கம்

ஆக்ஸ்ட் 1ஆம் தேதி விஷால் சிக்கா நிறுவனத்தில் தனது பணிகளை துவங்கினார். இருக்கையில் அமர்ந்து அவர் முதல் வேலையாக, கடந்த 2 வருடத்தில் இன்போசில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பணியாளர்கள் அனைவருக்கும், நிறுவனத்திற்கும் மீண்டும் வருமாறு ஒரு மெயிலை தட்டினார். இதற்கு தலைப்பு "A new beginning".

2 வருடமாக நிறுவனத்தின் நிலை..

2 வருடமாக நிறுவனத்தின் நிலை..

நாராயணமூர்த்தி நிறுவனத்தில் மீண்டும் இணைந்ததற்கு முன்னரே, இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து கிழ் மட்டம் , மேல், நடு மட்டம் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்கள். சரசரியாக இன்போசிஸ் பணியாளர்களில் 5இல் ஒருவர் வெளியேறினார்கள்.

நம்பிக்கை
 

நம்பிக்கை

மேலும் இந்த மின்னஞ்சலில் நிறுவனம் வளர்ச்சிக்கு புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளது, மேலும் நிர்வாகம் மற்றும் பணியார்கள் இடையில் இது வரை கண்டிடாத ஒற்றுமை மற்றும் வலிமை உள்ளது. மேலும் இன்போசிஸ் பணியாளர்கள் (Infoscion) என்றுமே இன்போசிஸ் பணியாளர்கள் (Infoscion) தான் என்று எனக்கும் நிர்வாகத்திற்கு தெரியும்.

புதிய தொழில்நுட்பத்தில் இன்போசிஸ்

புதிய தொழில்நுட்பத்தில் இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனம் தற்போது அட்டோமேஷன், மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆகிய துறைகளை அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது. இந்தியாவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் பெரிய அளவில் வளர்ச்சி எதும் எட்டவில்லை. இத்துறைக்கு இன்றளவும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடகளையே நம்பி வருகிறோம்.

கீரின் சேனல்

கீரின் சேனல்

நிறுவனத்தின் பழைய பணியாளர்களை இணைக்கும் இந்த திட்டத்தின் பெயர் கீரின் சேனல். இத்திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக இந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு துறையின் துணை தலைவரான ஸ்ரீகந்தன் மூர்த்தி தெரிவித்தார்.

நிறுவன வளர்ச்சி

நிறுவன வளர்ச்சி

மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பல குறுகிய கால திட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கிறது. இது நிறுவனத்தை அதி விரைவாக உயர் நிலைக்கு, அல்லது குறைந்தபட்சம் உறுதியான நிலைக்கு உயர்த்தும் எனவும் விஷால் சிக்கா.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

100 former Infosys executives respond to Vishal Sikka's call, to join company again

More than 100 former Infosys executives are returning to the company, heeding new CEO Vishal Sikka's call to them to rejoin the one-time software industry bellwether in what could be a big confidence booster in its efforts to attract fresh talent and prevent existing employees from jumping ship.
Story first published: Thursday, October 16, 2014, 13:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X