நாட்டின் முன்னணி ஐடி நிறுவன பங்குகள் சரிவு!! ஹெச்.சி.எல் தான் டாப்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மந்த நிலையால் இன்றைய மும்பை பங்கு சந்தை வர்த்தகத்தில் ஐடித்துறை பங்கு அதிகளவு சரிவை சந்தித்தது. மேலும் முதலீட்டாளர்கள் இருப்பில் இருக்கும் இந்திய நிறுவன பங்குகளை அதிகளவில் விற்க துவங்கினர், இதனால் மும்பை பங்கு சந்தை காலையில் 100 புள்ளிகள் வரை சரிந்து வர்ததகம் முடியும் தருவாயில் சரிவில் இருந்து மீண்டது.

 

இன்றைய வர்த்தகத்தில் ஐடி நிறுவனப் பங்குகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகியது.

ஹெச்.சி.எல்

ஹெச்.சி.எல்

ஷிவ் நாடார் தலைமை வகிக்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பங்குகள் இன்று 9.09 சதவீதம் சரிவை சந்தித்து 1505 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

 டிசிஎஸ்

டிசிஎஸ்

டாடா குழுமத்தில் லாபகரமான நிறுவனம் டிசிஎஸ். இந்நிறுவனம் இன்று 6.4 சதவீத வருவாய் வளரச்சியுடன் தனது 2014ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்நிலையிலும் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8.73 சதவீதம் சரிவை சந்தித்தது 2444.90 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மைண்ட்டிரீ

மைண்ட்டிரீ

இதேபோல் இந்தியாவில் தலைமையிடமாக கொண்டு ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்காவில் செயல்படும் மைண்ட்டிரீ நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 2.27 சதவீதம் சரிந்தது.

டெக் மஹிந்த்ரா
 

டெக் மஹிந்த்ரா

வங்கியியல், ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவில் முன்னணியாக இருக்கும் மஹிந்திரா குழுமத்தின் சாப்ட்வேர் நிறுவனமான டெக் மஹிந்த்ராநிறுவன பங்குகள் சுமார் 1.28 சதவீதம் சரிந்தது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

முன்னணி நிறுவனங்கள் எல்லாம் சரியும் போது இன்போசிஸ் மட்டும் என்ன விதிவிளக்கா. இந்நிறுவன பங்குகளும் 0.30 சதவீதம் சரிந்தது.

விப்ரோ

விப்ரோ

இன்போசிஸ், ஹெச்.சி.எல் நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் விப்ரோ நிறுவன பங்குகள் 1.08 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. மேலும் மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆரக்கிள், மெப்பசிஸ் போன்ற நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT stocks hammered on numbers, growth outlook; HCL down 9%, TCS down 8%

Tech stocks like TCS, HCL Tech and Tech Mahindra were hammered in trade today, as results from biggies TCS and HCL Tech fell below expectations.
Story first published: Friday, October 17, 2014, 18:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X