ரூ.50,000 கோடி முதலீட்டில் 5 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க திட்டம்.. "மேக் இன் இந்தியா"

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான நடந்த பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத் துறையின் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இக்கூட்டத்தில் பாதுகாப்பு துறையின் செயலாளர், முப்படையின் தலைவர்கள், டி.ஆர்.டி.ஒ தலைவர் மற்றும் பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நீர்மூழ்கி கப்பல்

நீர்மூழ்கி கப்பல்

பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் துவக்கமாக இந்திய பாதுகாப்பு துறைக்கு தேவையான 5 நீர்மூழ்கி கப்பல்களை 50,000 கோடி ரூபாய் முதலீட்டில் பிற நாடுகளின் உதவியுடன் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது இந்தியா பாதுகாப்புத்துறை. இதற்கான ஒப்புதலையும் மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் அளித்துள்ளது.

கடற்படை

கடற்படை

இதன் மூலம் இந்திய கடற்படையின் வலிமை அதிகரிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் முழுக்கு முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் போர் கப்பல் வெளியானது. மேலும் போர்க் கப்பல்களை மேம்படுத்தும் புதிய தொழிற்நுட்பங்களை இந்தியாவில் உருவாக்கவும், வெளிநாடுகளில் இருந்த பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏவுகணைகள்
 

ஏவுகணைகள்

மேலும் இஸ்ரேல் நாட்டில் இருந்து பெரும் ரானுவ வாகணங்கள் அதாவது டாங்குகள் போன்ற கடுமையான போர் கருவிகளை தாக்கும் 8,356 ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒப்பந்த மதிப்பு 3,200 கோடி ரூபாயாகும். மேலும் ஏவுகணைகளை ஏவ 321 லான்சர்களையும் பெற உள்ளது இந்திய பாதுகாப்பு துறை.

கண்காணிப்பு விமானம்

கண்காணிப்பு விமானம்

அதிநவீன சென்சார்கள் பொருத்திய 12 டூரோநியர் கண்காணிப்பு விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து பெற உள்ளது. இதன் மதிப்பு மட்டும் 1850 கோடி ரூபாய் ஆகும்.

டாங்குகள்

டாங்குகள்

அதுமட்டும் அல்லாமல் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் 662 கோடி மதிப்பில் 362 டாங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

நீர்மூழ்கி கப்பல் உற்பத்தி

நீர்மூழ்கி கப்பல் உற்பத்தி

இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல் உற்பத்தியை துவங்க பாதுகாப்பு துறை ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளது. இக்குழு அடுத்த 6 முதல் 8 வாரங்களில் இந்தியாவில் இருக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனங்களை ஆய்வு செய்யத பின் நிறுவனங்களை இணைத்து கட்டுமான பணியை துவங்கும்.

13 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே

13 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே

இந்திய கடற்படை தற்போது வெறும் 13 நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே வைத்துள்ளது. 1999ஆம் ஆண்டு இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து 2030ஆம் வருடத்திற்குள் நீர்மூழ்கி கப்பல் எண்ணிக்கையை 24ஆக உயர்த்த வேண்டும் என்று இலக்கை நிர்ணயம் செய்தது இதன் படி பணிகள் நடைபெற்று வருகிறது.

2016இல் 6 கப்பல்கள்

2016இல் 6 கப்பல்கள்

மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய கடற்படைக்கு 6 நிர்மூழ்கி கப்பல்களை ஆர்டர் செய்தது. இக்கப்பல்கள் வரும் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிற்கு வந்து சேரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Make In India: 6 Desi Submarines Worth 50,000 Cr To Be Built

Defence projects worth a whopping Rs 80,000 crore were on Saturday cleared by the government which decided that six submarines will be made indigenously and over 8,000 Israeli anti-tank guided missiles and 12 upgraded Dornier surveillance aircraft will be purchased.
Story first published: Wednesday, October 29, 2014, 13:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X