இன்போசிஸ் சிக்காவுடன் சந்திப்பு: தொலைதொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான விஷால் சிக்கா புதன்கிழமை மாலையில் ஐடி மற்றும் டெலிகாம் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்தித்தார். இச்சந்திப்பில் மத்திய அரசின் 1 இலட்சம் கோடி மதிப்பிலான "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தில் இந்தியா நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை பற்றி இருவரும் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிவித்தார்.

 

இச்சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.

இது இரண்டாவது சந்திப்பு

இது இரண்டாவது சந்திப்பு

விஷால் சிக்காவும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்களின் இச்சந்திப்பு இரண்டாவது முறையாகும். முதல் சந்திப்பு டிஜிட்டல் இந்தியா பற்றிய முதல் கூட்டம் ஜெர்மனியில் நடந்தது, அதில் இருவரும் கலந்து பேசினார்கள். இதன் தொடர்ச்சியாகவே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

டிவிட்டர் செய்தி

டிவிட்டர் செய்தி

இச்சந்திப்பு குறித்து ரவி சங்கர் பிரசாத் அவர்கள் டிவிட்டரில் தகவல் தெரிவித்திருந்தார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

மேலும் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுடன் பணியாற்றுவது சிறப்பான விஷயம், ஆனால் இத்திட்டத்தில் சிறு நிறுவனங்களை அதிகளவில் உட்படுத்த திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் சிறு நிறுவனங்கள் வியாபாரம் பெருக்க உதவிகரமாக இருக்கும் என அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பிடிஐ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐடித் துறை
 

ஐடித் துறை

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் நாட்டின் முக்கிய துறைகளான சுகாதாரம், கல்வி, நிதியியல் சேவைகள் மற்றும் பிற துறைகளை மேம்படுத்தவும், மத்திய அரசிற்குள் தகவல் பரிமாற்றத்திற்காக பாதுகாப்பான மின்னஞசல் தளத்தை உருவாக்குதல் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.

கல்வித் துறை

கல்வித் துறை

மேலும் அடுத்த 5 வருடத்திற்குள் சுமார் 1 கோடி மாணவர்களுக்கு ஐடி கல்வி பற்றிய அறிவை புகுத்த மத்திய அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys CEO meets Telecom Minister

Infosys CEO Vishal Sikka on Wednesday met IT and Telecom Minister Ravi Shankar Prasad to discuss how the Indian IT companies can be involved in the Rs 1 lakh crore Digital India programme.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X