சென்னை ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்த பிளிப்கார்ட் பிரதர்ஸ்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைவர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், சென்னையில் உள்ள ஏதர் (Ather) என்னும் புதிதாக துவங்கப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

 

இந்நிறுனம் இந்திய சந்தைக்கு அதிகவேக எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது, மேலும் இந்நிறுவனம் சென்னை ஐஐடி கல்லூரியுடன் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

ஏதர் நிறுவனம்

ஏதர் நிறுவனம்

2013ஆம் ஆண்டில் இந்நிறுவனம் இந்தியாவில் அதிகவேக எலக்ட்ரிக் வாகனகங்களை தயாரிக்க முடிவு செய்து சென்னையை மையமாக வைத்து இந்நிறுவனத்தை துவங்கினர் தருண் மேத்தா மற்றும் சுவப்நில் ஜெயின் ஆகியோர்.

முதலீடு

முதலீடு

இந்நிறுவனத்தின் பிளிப்கார்ட் பிரதர்ஸ் மட்டும் சுமார் 1 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் ஏதர் நிறுவனத்தில் மெட்ஆல் நிறுவனத்தின் தலைவர் ராஜூ வென்கட்ராமன் அவர்களும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

15 பணியாட்கள் மட்டுமே

15 பணியாட்கள் மட்டுமே

இந்நிறுவனத்தில் தற்போது வெறும் 15 பணியாட்கள் மட்டுமே உள்ளனர். முதற்கட்டமாக இந்நிறுவனத்தில் டிசைன் மற்றும் டெஸ்டிங் அகிய பணிகள் நடைபெறு வருகிறது. மேலும் இப்புதிய வாகனத்தின் உற்பத்தி சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் சில செயல்வடிவங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது.

பிளிப்கார்ட்
 

பிளிப்கார்ட்

சச்சின் மற்றும் பின்னி பான்சால் கூட்டணி ஆட்டோமொபைல் நிறுவனம் மட்டும் அல்லாமல் பெங்களுரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆன்லைன் கேம்ஸ் நிறுவனமான மேடுராட் கேம்ஸ் நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாத துவக்கத்தில் 1 மில்லியன் டாலர் அளவு முதலீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart founders invest in Chennai start-up

Flipkart founders Sachin Bansal and Binny Bansal has invested around $1 million in Chennai-based start-up, Ather.
Story first published: Wednesday, December 3, 2014, 12:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X