பங்கு இருப்புகளை குறைக்கும் இன்போசிஸ் தலைகள்!! திடீர் முடிவு...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நாட்டின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் பெரும் தலைகள் தங்களின் பங்கு இருப்பை குறைத்து, நிதிகளை திரட்டி பிற துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்ட நான்கு நிறுவனர்கள் சுமார் 32.6 மில்லியன் பங்களை விற்க முடிவு செய்துள்ளனர்.

 

இந்த அறிவிப்பால் பங்கு சந்தையில் திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3 சதவீதம் குறைந்துள்ளது.

இன்போசிஸ் தலைகள்

இன்போசிஸ் தலைகள்

இந்நிறுவனத்தின் நிறுவனர்களான நாராயணமூர்த்தி, நந்தன் நீலேகனி, ஷிபுலால் மற்றும் கே.தினேஷ் ஆகியோர் தங்களின் இருப்பில் உள்ள நிறுவன பங்குகளில் 32.6 மில்லியன் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளனர். இதுக்குறித்த விபரங்களை இன்போசிஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

விலை குறைவு

விலை குறைவு

மேலும் 32.6 மில்லியன் பங்குகளை வெள்ளிக்கிழமை முடிவடைந்த விலையை விட 4 சதவீத குறைவான விலை, அதாவது 1,988 ரூபாய்க்கு விற்க உள்ளனர்.

நிதித் திரட்டல்

நிதித் திரட்டல்

மேலும் இந்த பங்கு விற்பனையின் மூலம் நான்கு தலைவர்களும் சுமார் 1.1 பில்லியன் டாலர் வரை நிதி திரட்ட முடியும்.

சிக்காவின் என்டிரி
 

சிக்காவின் என்டிரி

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் உயர் தலைவர்கள் தொடர்ந்து வெளியேறிய பின் கடுமையான தேர்வுக்கு பின் விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக பெறுப்பேற்றுக் கொண்டார்.

இன்போசிஸ் கண்ட மாற்றங்கள்

இன்போசிஸ் கண்ட மாற்றங்கள்

விஷால் சிக்காவின் நியமனத்திற்கு பிறகு இந்நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் முற்றிலும் மாறுப்பெற்றுள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 95.50 புள்ளிகள் குறைந்த 1974.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys founders look to sell shares worth $1.1 bn

Infosys share prices fell by over 3 per cent on Monday morning on reports of a bulk sale of 32.6 million shares.
Story first published: Monday, December 8, 2014, 13:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X