இரும்பு தாது இறக்குமதியில் புதிய உச்சம்!! 7 மாதங்களில் 6.8 மில்லயன் டன் இறக்குமதி...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிங்கப்பூர்: இந்தியாவில் இரும்பு தாதுவின் உற்பத்தி கடுமையாக குறைந்ததாலும் உலகநாடுகளின் மந்தமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அதன் விலை குறைந்தது. இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இந்திய எஃகு உற்பத்தியாளர்கள் அதிகளவில் இரும்பு தாதுவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தனர்.

இதன்படி நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும், சுமார் 6.76 மில்லியன் டன் இரும்பு தாதுவை இந்திய எஃகு உற்பத்தி நிறுவனங்கள் இறக்குமதி செய்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கர்நாடகா மற்றும் கோவா சுரங்கம்

கர்நாடகா மற்றும் கோவா சுரங்கம்

உலகளவில் இரும்பு தாது உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் இந்தியா, சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படும் இரும்பு தாதுவை குறைக்கவும், தடுக்கவும் மத்திய அரசு கர்நாடகா மற்றும் கோவா சுரங்கங்களில் உற்பத்தி செய்ய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் கடந்த 2 வருடமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா இரும்பு தாதுவை இறக்குமதி செய்து வருகிறது.

ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட்

ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட்

ஆனால் இந்த வருடம் ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சுரங்க உரிமங்கள் காலாவதியானதால், இரும்பு தாதுவின் பற்றாக்குறை அதிகளவில் இருந்தது, இதன் காரணமாகவும் இறக்குமதி அதிகரித்தது.

இந்தியா

இந்தியா

ஆனால் வல்லுனர்கள் கூறுகையில் உலகநாடுகளின் எஃகு தேவையை இந்தியா பூர்த்தி செய்ய தவறியது, இதன் காரணமாக உலக சந்தையில் இதன் விலை அதிகளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

330 மில்லியன் டன்

330 மில்லியன் டன்

அடுத்த முன்று வருடத்தில் உலக நாடுகளின் இரும்பு தாது தேவையின் அளவு 330 மில்லியன் டன்னாக உயரும் என ஆய்வு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ்

ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ்

இந்தியாவில் எஃகு உற்பத்தியில் முன்றாம் இடத்தில் இருக்கும் ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனம் மட்டும் சுமார் 4.6 மில்லியன் டன் இரும்பு தாதுவை இறக்குமதி செய்துள்ளது. அதை தொடர்ந்து டாடா ஸ்டீல் நிறுவனம் 1 மில்லியன் டன் இறக்குமதி செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India iron ore imports hit record 6.8 mln T as prices fall

India's iron ore imports rose to a record 6.76 million tonnes in the first seven months of its fiscal year as sliding global prices and limited supply at home pushed steel producers to buy the raw material overseas, industry data showed on Friday.
Story first published: Tuesday, December 9, 2014, 15:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X