இந்தியாவில் ஜியோமி மொபைல் விற்பனைக்கு தடை!! காப்புரிமை பிரச்சனை

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மொபைல் உலகில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு பிறகு காப்புரிமை பிரச்சனைகளில் தற்போது ஜியோமி மற்றும் எரிக்சன் சிக்கியுள்ளது. எரிக்சன் நிறுவனம் ஜியோமி நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. இதனால் இந்தியாவில் ஜியோமி மொபைல் போன்களை விற்க இடைகால தடையை சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

 

இவ்வழக்கின் மேல்முறையீட்டில் இத்தடையை உறுதி செய்தது நீதிமன்றம். இத்தடை ஜியோமி நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ள பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இத்தடை பொருந்தும்.

விற்பனை பாதிப்பு

விற்பனை பாதிப்பு

இத்தடையினால் ஜியோமி நிறுவனத்தின் விற்பனை அளவு அதிகளவில் பாதிக்கும், அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகமும் குறையும். இதே காப்புரிமை பிரச்சனையில் மொபைல் உலகின் ஜாம்பவான் என போற்றப்படும் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை சரி பாதியாக குறைந்தது மறுக்க முடியாத ஒன்று.

எரிக்சன் வழக்கு

எரிக்சன் வழக்கு

ஜியோமி நிறுவனம் மொபைல் போன் தயாரிப்பு, ஒருங்கிணைப்பதில், இறக்குமதி அல்லது விற்பனை யுக்தி என அனைத்திலும் எரிக்சன் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற முறையில் செய்து வருவதாக எரிக்சன் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஜியோமி

இந்தியாவில் ஜியோமி

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பே களமிறங்கிய ஜியோமி நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் உதவியுடன் நாட்டின் இலட்சக்கனக்கான போன்களை விற்பனை செய்து குறிப்பிடத்தகும் அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்தது.

இறக்குமதி
 

இறக்குமதி

இந்த தடைக்கு இனங்க நீதிபதி ஜி.பி.மிட்டல் சுங்கத்துறையை ஜியோமி போன் இறக்குமதியை தடுக்க உத்திரவிட்டுள்ளது. மேலும் இதற்கு இடையில் ஏதேனும் இறக்குமதி செய்யப்பட்டால் எரிக்சன் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கும் படியும் சுங்கத்துறைக்கு உத்திரவிட்டுள்ளது நீதிமன்றம்.

விபரங்கள்

விபரங்கள்

மேலும் நீதிமன்றம் இந்தியாவில் ஜியோமி மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இதுவரை எத்தனை ஏஎம்ஆர், எட்ஜ் மற்றும் 3ஜி போன்களை விற்றுள்ளது என்ற தகவல்களை உடனடியாக சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.

அவசர குழு

அவசர குழு

நீதிமன்றம் ஜியோமி தயாரிப்புகளின் விற்பனையை தடுக்க அவசர குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு ஜியோமி மற்றும் பிளிப்கார்டி மற்றும் அதன் கிடங்குகளை ஆய்வு செய்து தயாரிப்புகள் மற்றும் ஆவணங்களை சேகரிக்கவும், சீல் வைக்கவும் சென்றுள்ளது. இக்குழு அடுத்த 4 வாரத்தில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவு அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Row over patent violations: Xiaomi banned from selling handsets in India

The Delhi High Court in an interim order has restrained Xiaomi as well as online e-commerce site Flipkart from selling in India handsets of the Chinese mobile maker that run on the technology patented by Ericsson.
Story first published: Thursday, December 11, 2014, 12:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X