விஜய் மல்லையா "நாணயமற்றவர் அல்ல"!! கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிவிப்பு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொல்கத்தா: யுனைடெட் ப்ரூவரிஸ் என்னும் மதுபான நிறுவனத்தின் தலைவரான விஜய் மல்லையா தனது விமான போக்குவரத்து நிறுவனமான கிங்பிஷர் நிறுவனத்தை நடத்துவதற்காக வங்கிகளில் சுமார் 7,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இத்தொகையில் மீதமுள்ள 5,000 கோடி ரூபாய் அளவு பணத்தை செலுத்த முடியாத நிலையில் நிறுவனம் முற்றிலும் முடங்கியது.

இவருக்கு கடன் அளித்த வங்கி மற்றும் நிதிநிறுவனங்கள் அனைத்தும் இவரை நாணயமற்றவர் என்று அறிவிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் முதன்முதலாக வெற்றிக்கண்டது யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தான்.

ஆனால் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு சாதகமாக இந்த அறிவிப்பை ரத்து செய்துள்ளது.

ஆய்வுக்குழு
 

ஆய்வுக்குழு

இவ்வழக்கு விசாரணையில் விஜய் மல்லையா தரப்பு, யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஆய்வுக்குழு, ரிசர்வ் வங்கியின் வரையறைக்கப்பட்ட கட்டளைகளுக்கு உட்பட்டு இல்லை என்று தெரிவித்துவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மல்லையாவிற்கு அறிவிக்கப்பட்ட நாணயமற்றவர் என்ற அறிவிப்பை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா

அது குறித்து யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தலைவர் கூறுகையில், "வங்கி நிர்வாகம், ரிசர்வ் வங்கியின் கட்டளைகளுக்கு உட்பட்டு புதிய குழு ஒன்றை அமைத்து மறு ஆய்வு செய்து மீண்டும் மல்லையா அவர்களை நாணயமற்றவர் என்று அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.

15 நாட்கள்

மேலும் மறுஆய்விற்கான காலஅவகாசம் வெறும் 15 மட்டுமே ஆகும் எனவும் யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மற்றொரு உயர் அதிகாரி தெரிவித்தார்.

வங்கிகள்

கிங்பிஷர் நிறுவனம் மட்டும் நாணயமற்ற நிறுவனமாக அறிவிக்கப்படவில்லை, இதற்கு முன் வங்கிகளில் கடன் பெற்று டேக்கா கொடுத்த பல நிறுவனங்கள் வங்கிகளின் முயற்சியின் மூலம் நாணயமற்ற நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற நிறுவனங்கள்
 

பிற நிறுவனங்கள்

இதில் சில நிறுவனங்கள் வின்சம் டைமெண்ட்ஸ் அண்டு ஜூவல்லரி, ஜூம் டெவலப்பர்ஸ், கூடான்ஸ் ரிடைல் மற்றும் மும்பையை தலைமையிடமாக கொண்ட தாயல் குரூப் நிறுவனத்தின் கேஎஸ்எல் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களும் அடக்கம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mallya's relief on wilful defaulter tag may not last beyond a fortnight

Liquor baron Vijay Mallya, who received a temporary reprieve last week from the Calcutta High Court regarding the status of wilful defaulter tag imposed on him by state-run United Bank of India (UBI), may have only a fortnight’s time left before he is again slapped with the same status.
Story first published: Monday, December 29, 2014, 10:37 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more