ஜம்ஷெட்ஜி டாடாவை கௌரவிக்கும் மத்திய அரசு!! ரூ.100, ரூ.5 நாணயங்கள் வெளியிடு...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் தொழிற்துறைக்கும், தொழில் அதிபர்களுக்கும் முன்னோடியான ஜம்ஷெட்ஜி டாடா அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் முடிவெடுத்துள்ளது.

 

"இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழிலுக்கு தற்போதுள்ள தலைமுறையில் எந்த ஒரு இந்தியனும் பெரிய அளவில் எதுவும் செய்து விடவில்லை" என ஜம்ஷெட்ஜி டாடாவை பற்றி லார்ட் கர்சன் கூறுகிறார்.

ஜம்ஷெட்ஜி டாடா

ஜம்ஷெட்ஜி டாடா

ஜம்ஷெட்ஜி டாடா அவர்களின் பெயரில் நகரங்கள், ரயில் நிலையங்களை கொண்டுள்ள இவர் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாடா குழுமத்தை நிறுவியவர். இந்திய தொழிலதிபர்களுக்கு முன்னோடியாக இருக்கும் ஜம்ஷெட்ஜி டாடாவை தற்போது இந்திய அரசாங்கம் கௌரவிக்கும் நேரம் வந்து விட்டது.

175வது பிறந்தநாள்

175வது பிறந்தநாள்

அவரின் 175வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை கௌரவிக்கும் வகையில் அவரின் படம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

பிரதமரின் மேக் இன் இந்தியா முயற்சி கண்டிப்பாக தற்போதுள்ள இந்திய தொழிலதிபர்களை கூடுதல் உற்சாகத்துடன் பங்களிப்பார்கள் எனவும் நம்பப்படுகிறது.

சிறிய விழா
 

சிறிய விழா

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் தெரிவித்துள்ளபடி இந்த நாணயத்தை வெளியிடும் விழா சிறிய அளவில் மோடி அவர்களின் இல்லத்தில் நடைபெறும். இதில் பங்கு பெறப்போகும் நபர்களின் பட்டியல் இன்னும் முடிவாகவில்லை.

மூன்று இலக்குகள்

மூன்று இலக்குகள்

1880 முதல் 1904 வரை வாழ்ந்த ஜம்ஷெட்ஜி டாடா அவர்கள் மூன்று இலக்குகளில் மட்டுமே அவரது கவனம் இருந்தது: இரும்பு மற்றும் ஸ்டீல் நிறுவனம் நிறுவுவது, நீர்மின் உற்பத்தி மற்றும் உலக தரம் வாய்ந்த அறிவியல் கல்வி நிறுவனத்தை உருவாக்குவது. இருப்பினும் அவருடைய காலகட்டத்தில் தாஜ்மஹால் ஹோட்டல் மட்டுமே கட்டப்பட்டது.

நாணயங்களின் மதிப்பு 4,500 ரூபாய்

நாணயங்களின் மதிப்பு 4,500 ரூபாய்

ஜம்ஷெட்ஜி அவர்களின் மார்பு வரை உள்ள படம் பொறிக்கப்பட்ட, ரூ.100/- மற்றும் ரூ.5/- வெள்ளி நாணயங்களை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொல்கட்டாவில் உள்ள நாணயம் செய்யப்படும் இடத்தில் இந்த நாணயங்கள் செய்யப்படும். இது ஒவ்வொன்றும் ரூ.4,500/-க்கு விற்கப்படும்.

மதன் மோகன் மால்வியா

மதன் மோகன் மால்வியா

இதற்கு முன்பு சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் விஞ்ஞானிகளை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் பல நாணயங்களை வெளியிட்டுள்ளது. அப்படி கடைசியாக வெளியிடப்பட்டது 2013-ல், பாரத ரத்னா விருதை பெற்ற திரு மதன் மோகன் மால்வியா அவர்களின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt to mint coins to honour Jamsetji Tata

The Prime Minister's Office has decided to mint coins in honour of his 175th birth anniversary.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X