கோட்டாக் மஹிந்திரா- ஜஎன்ஜி வைஸ்யா வங்கி இணைப்பிற்கு பங்குதாரர்கள் ஒப்புதல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஜஎன்ஜி வைஸ்யா வங்கியை சுமார் 15,000 கோடி ரூபாய்க்கு கைபற்றுவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவித்துள்ளது.

 

இந்த அறிவிப்பை தொடர்ந்து கோட்டாக் மஹிந்திரா வங்கி இணைப்புகளுக்காக அனைத்து வேலைகளும் துரித முறையில் செய்து வந்தது. இதன் படி இந்த இணைப்பிற்கு கோட்டாக் மஹிந்திரா வங்கியின் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்நிறுவனம் பங்குதாரர்களின் ஒப்புதலை பெற்றதாக தெரிவித்திருந்தது.

பங்குதாரர்கள் ஒப்புதல்

பங்குதாரர்கள் ஒப்புதல்

இதற்காக புதன்கிழமையன்று கோட்டாக் மஹிந்திரா வங்கி தனது பங்குதாரர்களுடன் மிகப்பெரிய அளவில் ஒரு ஆலோசனை கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதன் முடிவில் 99.93 சதவீத பங்குதாரர்கள் சார்பில், 99.30 பங்குதாரர்கள் இந்த இணைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

பங்கு பறிமாற்றம்

பங்கு பறிமாற்றம்

மேலும் இந்த அறிக்கையில் நிறுவன இணைப்பின் மூலம் பங்குதாரர்களுக்கு 1000 ஜஎன்ஜி வைஸ்யா வங்கி பங்குகளுக்கு, 725 கோட்டாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் அளிப்பதாக தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் போராட்டம்

ஊழியர்களின் போராட்டம்

கோட்டாக் மஹிந்திரா- ஜஎன்ஜி வைஸ்யா வங்கி இணைப்பின் மூலம் ஜஎன்ஜி வைஸ்யா வங்கி ஊழியர்களுக்கு தங்களின் பணி நிரந்திரத்தை வேண்டி போராட்டகள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இக்கூட்டணி தனது பங்குதார்களிடம் ஒப்புதல் பெற்றது குறிப்பிடதக்கது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

மேலும் இவ்விரு வங்கிகளும் இணைப்பிற்காக ரிசர்வ் வங்கி, இந்திய போட்டி ஆணையம் (CCI) மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்தும் ஒப்புதல் பெற்றுள்ளது. மீதமுள்ளது ஜஎன்ஜி வைஸ்யா வங்கி ஊழியர்கள் மட்டுமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kotak-ING Vysya merger gets shareholders' approval

Private sector Kotak Mahindra Bank has secured its shareholders’ approval for amalgamation of Bangalore-based ING Vysya Bank with itself.
Story first published: Thursday, January 8, 2015, 17:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X