சிஸ்கோ நிறுவனத்தில் கோடீஸ்வர பணியாளர்கள் எண்ணிக்கை 132ஆக உயர்வு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: நெட்வொர்கிங் துறையில் வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் சிஸ்கோ, தனது இந்திய கிளையில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை 3ன்றில் இருந்து 132ஆக உயர்த்தியுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

சிஸ்கோ நிறுவனத்தின் பணியாளர்கள் வெளியேற்றத்தை குறைக்கவும், நிறுவனத்தில் நிலைத்திருக்கவும் இந்நிறுவனம் பணியாளர்கள் சம்பளத்தை அதிகளவில் உயர்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி தான்.. எப்படி??

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

நரேந்திர மோடியின் கனவு திட்டமான "டிஜிட்டல் இந்தியா" திட்டத்தில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளதால், சிஸ்கோ நிறுவனம் இந்தியாவில் 1.7 பில்லியன் அமெரிக்கா டாலர் முதலீடு செய்துள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் கிடைக்கபெறும் வர்த்தகத்தை செயல்படுத்த, திறன் வாய்ந்த பணியாளர்களை நிறுவனத்தில் நிலைத்திருக்கவே இந்நிறுவனம் சம்பளத்தை அதிகளவில் உயர்த்தியுள்ளது.

புதிய பணியாளர்கள்

புதிய பணியாளர்கள்

மேலும் அடுத்த சில மாதங்களில் இந்நிறுவனத்தின் இந்திய கிளையில் இன்ஜினீயரிங் மற்றும் சேல்ஸ் பிரிவில், இந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் புதிய பணியாளர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளது சிஸ்கோ.

நிறுவனத்தின் நிலை
 

நிறுவனத்தின் நிலை

இரண்டு வருடத்திற்கு முன்பு இந்நிறுவனத்தில் திறமையான பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது இதன் அளவு குறைந்துள்ளது என இந்நிறுவனத்தின் தென் ஆசிய மண்டலத்தின், மனித வள பிரிவின் உயர் அதிகாரி சீமா நாயர் தெரிவித்தார்.

பணியாளர்கள் வெளியேற்றம்

பணியாளர்கள் வெளியேற்றம்

மேலும் அவர் இந்நிறுவனத்தில் 2012-13ஆம் ஆண்டுக்காலகட்டங்களில் பணியாளர்கள் வெளியேற்றும் அதிகளவில் இருந்தது, இதில் இந்நிறுவனத்தின் 4 முக்கிய பணியாளர்களை நிர்வாகம் இழந்துள்ளது. இதில் இந்திய கிளையின் தலைவர் ஜெப் வெயிட் முக்கியமானவர் எனவும் சீமா நாயர் தெரிவித்தார்.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இந்நிறுவனத்தின் இன்ஜினீயரிங் பிரிவில் (இந்திய கிளையில்) பணியாற்றும் இன்ஜினீயரின் உயரிய சம்பளம் 1.35 கோடியில் இருந்து 7 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் கோடிகளில் குறைவான சம்பளமாக 1.35 கோடி ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.35 கோடி ரூபாய் சம்பளம் பெறும் பணியாளரின் பதவி technical lead ஆகும்.

இந்தியாவில் 18% வளர்ச்சி

இந்தியாவில் 18% வளர்ச்சி

கடந்த ஜூலை 26ஆம் தேதி முடிவடைந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவில் 18 சதவீதம் உயர்ந்திருந்தது. இதே நேரத்தில் சீனாவில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி 26 சதவீத சரிந்திருந்தது குறிப்பிடதக்கது.

ஆட்குறைப்பு

ஆட்குறைப்பு

மேலும் 2013ஆம் ஆண்டில் இந்நிறுவனம் 4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டில் 6,000 பணியாளர்களை பணிநீக்க செய்ய முடிவு செய்துள்ளது, இதில் இந்தியாவில் 1,000 பணியாளர்கள் நிக்கப்படுவார்கள் எனவும் சிஸ்கோ தெரிவித்திருந்தது. ஆனால் இந்நிறுவனம் தற்போது இந்திய கிளையில் ஆட்சேர்ப்பு பணியில் இறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cisco adds 129 crorepatis in a year to retain talent

Infosys, the country’s second largest IT services firm, is open to ‘bigger scale’ mergers and acquisitions but with a caveat, it is not interested in “yesterdays” companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X