கல்வி துறையை விட 100% அதிக சம்பளம் பெறும் ஐடித்துறை பணியாளர்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியா பல துறைகளில் முன்னேற்றம் கண்டு வருகிறது, அதிலும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறை பணியாட்களின் சம்பளம் கடந்த 10 வருடங்களில் கணிசமான அளவில் உயர்ந்துள்ளதை எளிதாக காணமுடிகிறது. இந்நிலையில் எந்த துறை பணியாளர்கள் அதிகளவில் சம்பளம் வாங்குகின்றனர் என்பதை கண்டறிய மான்ஸ்டர்.காம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.

 

இதில் முதல் இடத்தை ஐடி துறையும், வங்கியியல் துறை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. பிற துறைகளின் நிலையை என்ன?? முக்கியமாக கல்வி துறையை பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும்...

ஐடித்துறை

ஐடித்துறை

இக்கணக்கெடுப்பில் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை பணியாளர்கள், ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.341.80 சம்பளம் பெருகின்றனர். மேலும் இத்துறை மிகவும் இலாபமளிக்க கூடிய துறையாக உருவெடுத்துள்ளது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வங்கித்துறை

வங்கித்துறை

ஐடி துறையை அடுத்து வங்கித் துறை பணியாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.291/- என்ற அளவில் சம்பளம் பெருவதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

மான்ஸ்டர்.காம்

மான்ஸ்டர்.காம்

முன்னணி இணையதள வேலை வாய்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நிறுவனமான மான்ஸ்டர் இந்தியா கூறியுள்ள படி, இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை பார்ப்பவர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.341.80 சம்பாதிக்கிறார்கள். இது மற்ற அனைத்து துறைகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமான சம்பளமாக விளங்குகிறது.

மான்ஸ்டர் சாலரி இன்டக்ஸ் (MSI)
 

மான்ஸ்டர் சாலரி இன்டக்ஸ் (MSI)

மான்ஸ்டர்.காம் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின் படி கட்டுமான துறையில் சராசரியாஒரு மணி நேரத்திற்கு 259 ரூபாயும், கல்வித் துறையில் ரூ.186.50, மருத்துவ துறையில் ரூ.215/-, சட்டத்துறையில் ரூ.215.60, தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறையில் ரூ.230.90 ஆக உள்ளது.

கல்வித்துறை

கல்வித்துறை

ஒரு மணி நேரத்திற்கு ரூ.186.50 என்ற அடிப்படையில், கல்வித் துறையில் உள்ள பணியாளர்கள் தான் குறைவான சம்பளத்தை பெறுகிறார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 பாலியல் பாகுபாடு

பாலியல் பாகுபாடு

மற்ற துறைகளை காட்டிலும் இந்த துறையில் அதிகமான பெண்கள் வேலைப்பார்ப்பதால் தான் இந்த குறைவான சம்பளத்திற்கு காரணமாக கருதப்படுகிறது. இந்த துறையில், ஆண்களை விட பெண்களுக்கு 18 சதவீதம் குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

சம்பள இடைவெளி

சம்பள இடைவெளி

வேலையிடத்தில் ஆண்களுக்கு கொடுக்கும் அளவு பெண்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என உலகளாவிய மற்றும் அமெரிக்க வட்டாரங்களில் நடத்தப்பட்ட இதே ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்கா முதல் இந்தியா வரை..

அமெரிக்கா முதல் இந்தியா வரை..

இதற்கிடையில் பாலின அடிப்படையிலான சம்பள இடைவெளி இந்தியாவின் அனைத்து துறைகளிலும் நிலவுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.

அனைத்து துறை பட்டியல்

அனைத்து துறை பட்டியல்

மான்ஸ்டார் நிறுவனம் கணிப்புகளில் கிடைத்தை விபரங்கள் படி பிடிஐ அமைப்பு வடிவமைக்கப்பட்ட படம்

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT sector employees earn highest salary of Rs. 342 per hour

With a median gross salary of Rs. 341.8 per hour, the IT sector in India has emerged as the most lucrative sector in India, followed by finance where employees get Rs. 291 per hour, a report says.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X