பிராங்பேர்ட்: ஐரோப்பிய சந்தையில் நிலவும் பணசுருக்க நிலையை தவிர்க்க ஐரோப்பிய சென்ட்ரல் வங்கி, பத்திர கொள்முதலுக்காக சுமார் 100 பில்லியன் டாலருக்கும் (1.3 டிரில்லியன் டாலர்) அதிகமான பணத்தை அச்சடிக்க உள்ளது.
இதன் மூலம் வளரும் நாடுகள் அதிகளவிலான லாபத்தை அடைய உள்ளது. அதிலும் சீனாவிற்கு இணையாக வளர்ந்து வரும் இந்திய இந்த பத்திர கொள்முதல் திட்டத்தின் மூலம் தாறுமாறான முதலீட்டை பெற உள்ளது.

1.3 டிரில்லியன் டாலர்
இதற்கான அறிவிப்பை நேற்று மாலை பிராங்பேர்ட் நகரில் ஐரோப்பிய சென்ட்ரல் வங்கியின் கவர்னர் மரியோ திராகி 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்களை கொள்முதல் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதாவது ஐரோப்பிர அரசு சந்தையில் முதலீடு செய்ய 1.3 டிரில்லியன் டாலர் பணத்தை அச்சடிக்க போகிறது.

பத்திர கொள்முதல்
இத்திட்டம் வருகிற மார்ச் மாதம் துவங்கி செப்டம்பர் 2016ஆம் ஆண்டு வரை நிலவும் என மரியோ திராகி தெரிவித்தார்.

இந்தியா
இந்த பத்திர கொள்முதல் திட்டத்தினால் ஐரோப்பிய அரசு பணசுருக்க நிலையில் இருந்து மீண்டு வருமா என்பது தெரியாது ஆனால் கண்டிப்பாக இந்தியா பங்கு சந்தை, பத்திர முதலீடு மற்றும் ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

ஏன் இந்தியா??
உலகில் வளரும் நாடுகளில் பட்டியலில் சீனா, இந்தோனேஷியா, பிரேசில் போன்ற நாடுகள் இருக்கும் போது ஏன் ஐரோப்பா இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய வேண்டும்??? காரணம் உண்டு இந்தோனேஷியா, பிரேசில் நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா வர்த்தக ரீதியில் வளர்ந்த நாடு.

சீனா??
இந்தி முதலீட்டு போட்டியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கு மிகப்பெரிய போட்டி இருக்கும் என அனைவருக்கும் நினைக்கும் பட்சத்தில், இந்தியாவிற்கு சாதகமான ஒரு வாய்ப்பு உண்டு. இந்தியவில் முதலீடு செய்த கார்ப்ரேட் நிறுவன வருவாய் 16 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் நிதியாண்டில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனவும் கணிப்புகள் வெளிவந்துள்ளது.

சீனாவின் வளர்ச்சி
மேலும் சீனாவின் வளர்ச்சி விகிதத்தை சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கடந்த வருடத்தை விட குறைவாக மதிப்பிட்டுள்ளது. இது இந்தியா சந்தைக்கு மிகவும் லாபகரமான தருணம்.

இந்தோனேஷியா
வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா மற்றும் இந்தோனேஷியா நாடுகள் ஒரே விதிமாக இருகந்தாலும். தற்போது இந்தோனேஷியாவின் அரசியல் நிலை சற்று தொய்வாகவே உள்ளது. இந்நாட்டின் அதிபர் முன்னாள் தொழில்அதிபர் ஜோகோ பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்து வருகிறார்.

பன்னாட்டு நிறுவனங்கள்
அதுமட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தையை விட இந்தியாவில் தற்போது வேகமாக வளர முடியும். இதன் மூலம் பன்னாட்டு தனியார் நிறுவனங்களும் இந்தியா சந்தையில் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.

குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.