சவுதி மன்னர் அப்துல்லா மரணம்: கச்சா எண்ணெய் விலை 2% உயர்வு..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியாத்: கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் முதன்மையான நாடாக விளங்கும் சவுதி அரேபிய நாட்டின் மன்னர் அப்துல்லா வெள்ளிக்கிழமையன்று காலை காலமானர், இதை தொடர்ந்து இந்நாட்டிற்கு புதிய அரசராக அப்துல்லாவின் தம்பி, சல்மான சுவுதி அரேபியவின் புதிய அரசராக நியமிக்கப்பட்டார்.

அப்துல்லாவின் இறப்பு செய்தி வெளியான சில நிமிடங்களின் கச்சா எண்ணெயின் விலை 2 சதவீதம் அதிகரித்து 47.76 டாலராக உயர்ந்தது. கடந்த பத்து வருடத்தில் இது மிகப்பெரிய மாற்றமாகும்.

ஆசிய சந்தை

ஆசிய சந்தை

இன்று காலை ஆசிய சந்தையில் யு.எஸ் பென்ச்மார்க் WTI கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 2 சதவீதம் அதிகரித்து 47.76 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. பின்பு 3.17 சதவீதம் குறைந்து 46.31 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் Brent கச்சா எண்ணெயின் விலை 1.5 சதவீத உயர்வு பெற்று 1.05சதவீதம் சரிவை சந்தித்தது.

அப்துல்லாவின் முடிவு

அப்துல்லாவின் முடிவு

தற்போது நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலை மற்றும் உற்பத்தி அளவு அனைத்திற்கும் முக்கிய காரணம் அப்துல்லா தான். சல்மான் அட்சியில் கச்சா எண்ணெயின் உற்பத்தி அளவில் மாற்றம் ஏற்படவும் சில வாய்ப்புகள் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாக திகழ்ந்த அமெரிக்கா தற்போது எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. யு.எஸ் ஷேல் எண்ணெய் நிறுவனம் ஒரு நாளிற்கு 9 மில்லியன் பேரல் அளவிற்கு உற்பத்தி செய்து வருகிறது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளதால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகள் தங்களின் உற்பத்தியை அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் opec அமைப்பில் இருக்கும் பிற நாடுகளின் வருவாய் குறைந்துள்ளது.

சவுதி அரேபிய நாட்டின் உற்பத்தி

சவுதி அரேபிய நாட்டின் உற்பத்தி

கடந்த நவம்பர் மாதம் சவுதி அரேபிய அரசின் அறிவிப்பின் படி எண்ணெய் உற்பத்தி ஒரு நாளிற்கு 30 மில்லியன் பேரல் அளவிற்கு குறையாது என தெரிவித்துள்ளது.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Oil jumps after Saudi king's death amid huge market shifts

Oil prices jumped in early Asian trading on Friday as news of the death of Saudi Arabia's King Abdullah added to uncertainty in energy markets already facing some of the biggest shifts in decades.
Story first published: Friday, January 23, 2015, 15:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X