ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியால் ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் சரிவு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அரவிந்த் கெஜ்ரிவால் தலமையிலான ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியது. இதனால் மும்பை பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை பல ஏற்ற இறக்கங்கள் சந்தித்தது.

இந்நிலையில் சந்தை 300 புள்ளிகள் உயர்வுடன் இருந்தபோது ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 3.65 சதவீத சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது. மேலும் சில்லறை முதலீட்டாளர்களின் விருப்பதக்க நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னிலையில் உள்ளவை. இந்த சரிவின் மூலம் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தின் மீதான வர்த்தகத்தை குறைத்துள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் தனது ஆட்சிக் காலத்தில் எரிவாயு விலை விதிப்புக்கு எதிகாரவும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் எழுப்பினார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்து எதிர்த்து வந்தது.

தணிக்கை உத்தரவு

தணிக்கை உத்தரவு

அதுமட்டும் அல்லாமல் டெல்லியின் முதல் அமைச்சராக இருந்த போது கெஜ்ரிவால் ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தை தணிக்கை செய்ய உத்தரவிட்டார். அதன் பின் ஆட்சி பொறுப்பில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார்.

வெற்றி

வெற்றி

கெஜ்ரிவாலின் வெற்றியை தொடர்ந்து இந்நிறுவனத்திற்கு மீண்டும் பிரச்சனைகள் வரும் என்பதை உணர்ந்த முதலீட்டாளர்கள் இக்குழுமத்தின் மீதான முதலீடுகளை குறைத்துக்கொண்டனர்.

ரிலையன்ஸ் குழுமம்

ரிலையன்ஸ் குழுமம்

இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 3.65 சதவீதம், ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் நிறுவனம் 2.47 சதவீதம், ரிலையன்ஸ் கேப்பிடல் 2 சதவீதம் சரிவை கண்டது.

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி

இக்கட்சியின் வெற்றி முதலீட்டாளர்களை அதிகளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தவில்லை என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் எதிரொலியே இன்றைய மும்பை பங்குச்சந்தை நிலை.

பட்ஜெட்

பட்ஜெட்

மேலும் மத்திய பட்ஜெட் இந்திய சந்தையை அதிகளவில் பாதிக்கும் எனவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Group Stocks Sink As AAP Wins Delhi Election

Shares in Reliance Industries fell sharply as Arvind Kejriwal's Aam Aadmi Party won the elections in Delhi by a whopping majority.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X