ரயில் கட்டணத்தை விட குறைவான விலையில் விமான பயணம்!! ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பு...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று (புதன்கிழமை) ரயில் கட்டணத்தை விட குறைவான விலையில் விமான சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

 

இதன் படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவையில் இந்தியா முழுவதும் ஒரு வழி விமான பயணத்திற்கு வெறும் 599 ரூபாய் என்ற சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.

டிக்கெட் புக்கிங்

டிக்கெட் புக்கிங்

இச்சலுகையை பெற விமான பயணிகள் பிப். 11 முதல் பிப்.13 வரையில் டிக்கெட்டுகளை முன்பதவு செய்யவேண்டும். மேலும் பயண காலம் ஜூலை 1 முதல் அக்டோபர் 24 வரையிலான தேதிகளில் இருக்க வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. மேலும் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்த பின் கேன்சல் செய்ய கூடாது, கேன்சல் செய்தால் பணம் திரும்ப தரப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

விலை போர்

விலை போர்

இந்தியாவில் விமான போக்குவரத்தில் ஜனவரி- மார்ச், ஜூலை-செப்டம்பர் மாத காலங்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். இத்தகைய மந்தமான காலகட்டத்தில் பயணிகளை கவர இந்திய விமான நிறுவனங்கள் அதிகப்படியான சலுகை விலையை அறிவித்து வருகிறது, இதற்கு விமான எரிபொருளின் விலை குறைவும் சாதகமாக அமைந்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ்- விஸ்தாரா
 

ஜெட் ஏர்வேஸ்- விஸ்தாரா

மேலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சலுகை திட்டங்கள் அனைத்தும் டாடா மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் கூட்டணியில் உருவாக்கப்பட்ட விஸ்தாரா நிறுவனத்திற்கு போட்டியாகவே உள்ளது. விஸ்தாரா நிறுவனம் தனது 5வது விமானத்தை சில நாட்களுக்கு முன்று பெற்றது குறிப்பிடதக்கது.

பிற நிறுவனங்கள்

பிற நிறுவனங்கள்

இதுமட்டும் அல்லாமல் இண்டிகோ, கோஏர் போன்ற நிறுவனங்களும் இந்த விலை சுலுகை திட்டத்தில் இறங்கியுள்ளது. ஆனால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 599 ரூபாய் என்ற குறைவான விலைக்கு யாரும் சேவை அளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

இந்நிறுவனத்தின் நிர்வாகம் கைமாறியதில் இருந்து அதிகப்படியான சலுகையை அறிவித்து வருகிறது. இதன் படி கடந்த ஒரு மாதத்தில் 4 முறை சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது, இதில் 599 ரூபாய் திட்டமே மிகவும் குறைவான கட்டணம்.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதிநெருக்கடியை சமாளிக்க இந்நிறுவனத்தின் 1500 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

இந்நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரான கலாநிதி மாறன் தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை மட்டுமே வைத்துள்ளார். மேலும் இந்நிறுவனத்தின் நிர்வாக குழு மற்றும் நிர்வாக பொறுப்புகளில் இருந்து கலாநிதி மாறன், இவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் வெளியேறினர்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SpiceJet Ups Ante with 'Cheaper Than Train' Fares at Rs. 599

SpiceJet's "cheaper-than-train-fares" sale, announced on Wednesday, The budget carrier is selling one-way air tickets for as low as Rs. 599 (all-inclusive), making it the cheapest offer announced so far this year.
Story first published: Wednesday, February 11, 2015, 12:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X