கப்பல் கட்டுமான நிறுவனத்தில் 3,000 கோடி முதலீடு!! மஹிந்திரா & மஹிந்திரா

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் பலதுறை நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா குழுமம், பிப்பாவ் டிபென்ஸ் (Pipavav Defence) நிறுவனத்தின் பெருவாரியான பங்குளை கைபற்ற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

இதன் மூலம் பிப்பாவ் நிறுவனத்தில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

(அதிகம் செலவழிக்கும் கைகளை கட்டிப்போட சூப்பரான வழிகள்!!)

முன்று கட்ட டீல்

முன்று கட்ட டீல்

மேலும் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பை கணக்கில் கொண்டு இந்நிறுவனம் பிப்பாவ் நிறுவனத்தில் 3,000 கோடி ரூபாய் பங்குகளில் முதலீடு செய்ய மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் திட்டமிட்டுள்ளது. இன்றைய நிலையில் பிப்பாவ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 66 ரூபாயாகும்.

பிப்பாவ் நிறுவனம்

பிப்பாவ் நிறுவனம்

இந்தியாவில் கப்பல் கட்டுமானத்தில் முக்கிய நிறுவனமாக கருதப்படும் Pipavav Defence and Offshore Engineering நிறுவனம் 6,800 கோடி ரூபாய் கடனில் உள்ளது. மேலும் இந்நிறுவனம் சந்தையில் 12,000 கோடி ரூபாய் அளவில் மதிப்பீடு செய்யப்படுகிறது.

பங்கு இருப்பு
 

பங்கு இருப்பு

இந்நிறுவனத்தில் 45 சதவீத பங்குகளை இந்நிறுவனத்தின் தலைவர்களான நிக்கில் காந்தி மற்றும் பாவேஷ் காந்தி ஆகியோர் வைத்துள்ளனர். முதற்கட்டமாக மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கிளை நிறுவனமாந மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்நிறுவனத்தில் 19 சதவீத பங்குகளை கைபற்ற உள்ளது.

40 சதவீத பங்குகள்

40 சதவீத பங்குகள்

இந்த ஒப்பந்தத்தில் இரண்டாவது கட்டமாக 40 சதவீத பங்குகளை ஈவுத்தொகை அளிக்கும் முன் மஹிந்திரா டிபென்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கவும், முன்றாவது கட்டமாக பொது சந்தையில் இருக்கும் 26 சதவீத பங்குகளை கைபற்றவும் மஹிந்திரா அனுமதி அளிக்கவும் பிப்பாவ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மஹிந்திரா-பிப்பாவ்

மஹிந்திரா-பிப்பாவ்

இந்த ஒப்பந்தும் குறித்து மஹிந்திரா குழுமத்தின் கிளை நிறுவனமான கோட்டாக் மஹிந்திரா கேப்பிடல் நிறவனம் கூறுகையில்,"இந்த ஒப்பந்து குறிந்த பணிகள் விரைவாக நடந்து வருகிறது" என இந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் பிப்பாவ் நிறுவனம் இதுக்குறிந்த கேள்விகளுக்கு எந்த விதிமான பதிலும் அளிக்கவில்லை.

 அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

இந்திய பாதுகாப்புத்துறையில் அன்னிய முதலீட்டு அளவை 49 சதவீதமாக அதிகரித்த பின்பு இந்திய நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவங்களும் இத்துறையில் வர்த்தகம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

சந்தை கணிப்புகள்

சந்தை கணிப்புகள்

மேலும் அடுத்த 10 வருடத்தில் இந்நிறுவனத்தில் இந்திய பாதுகாப்புத்துறை 100 பில்லியன் டாலர் அளவு உயரும் என சந்தை கணிப்புகள் தெரிவிக்கிறது. இச்சந்தையை கைபற்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

மேலும் பிரதமர் மோடியின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் இந்திய கடற்படைக்கு தேவையான போர் கப்பல்களை இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் அடுத்த 10 வருடத்தில் நாட்டில் கப்பல்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குட்ரிட்டன்ஸ்

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mahindra & Mahindra to acquire Pipavav Defence in Rs 3,000-crore deal

Mahindra & Mahindra, one of India's largest diversified conglomerates, will purchase a majority stake in Pipavav Defence and Offshore Engineering for roughly Rs 3,000 crore at Rs 66 a share in a three-phase deal.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X