ஊட்டி ஹிந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையை புனரமைக்க மத்திய அரசு திட்டம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஊட்டி: இந்தியாவில் 17 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு நஷ்டத்தை மட்டுமே அளித்து வந்தது, இத்தகைய நிறுவனங்களை பட்டியல் போட்டு முழுமையாக மூட மோடி தலைமையிலான அரசு முடிவு செய்தது.

 

தற்போது மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்களை மீண்டும் உற்பத்தி நிலைக்கு கொண்டு வரச திட்டமிட்டுள்ளது.

 
ஊட்டி ஹிந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலையை புனரமைக்க மத்திய அரசு திட்டம்..

இதன் படி தமிழ்நாட்டில் ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் பிலிம்ஸ் தொழிற்சாலையை மீண்டும் உற்பத்தி நிலைக்க கொண்டு வரவும் புனரமைக்கவும் கனரக தொழில்துறை இணை அமைச்சரான சித்தேஷ்வரா இன்று பார்வையிட்டார்.

இத்தொழிற்சாலையை சீரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமைச்சர் சித்தேஷ்வரா எடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இத்தொழிற்சாலையை மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வர பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை சந்தித்து பேச உள்ளதாகவும் சித்தேஷ்வரா தெரிவித்தார்.

மேலும் மோடியின் கனவு திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தின் கிழ் தொழிற்சாலையை புனரமைக்க உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிய அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சித்தேஷ்வரா தெரிவித்தார்.

கடந்த வருடம் இந்நிறுவனத்தின் பணியாளர்களை VRS அளிக்க மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதன் மூலம் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் 300 பணியாளர்கள் VRS பெற்றுக்கொண்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Minister visits Hindustan Photo Manufacturing to consider its revival

Minister of state for heavy industries and public enterprises G M Siddeshwara, visited Hindustan Photo Manufacturing (HPF) factory in Ooty on Thursday. Last year, the previous UP government had decided to close down the sick public sector unit.
Story first published: Saturday, February 21, 2015, 14:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X