2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் மானிய தொகையில் 20% சேமிப்பு... எப்படி??

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நிதியமைச்சர்களுக்கு நிலையான பட்ஜெட் அறிக்கையை தயார் செய்வதில் மிகப்பெரிய சவாலாக விளங்குவது உணவு, எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஆகியவைகளுக்கான மானியத்தை ஒதுக்குவது தான்.

2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசு இந்த முன்று பிரிவுகளுக்கு அளிக்கும் மானியத்தில் சுமார் 20 சதவீத பணத்தை சேமித்துள்ளது என இந்தியாஸ்பென்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

20% சேமிப்பு

20% சேமிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மானிய அளவில் குறைந்ததுள்ளதாகவும், இந்த முன்று துறைகளுக்கான மாணியத்தில் சுமார் 20 சதவீத குறைந்துள்ளதாக IndiaSpend ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

கடந்த நிதியாண்டில் உணவு, எரிபொருள் மற்றும் விவசாய உரங்கள் ஆகியவற்றுக்கு சுமார் 2.51 இலட்சம் கோடி ரூபாய் மானியமாக ஒதுக்கப்பட்டது. இதே காலகட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையின் அளவு 2.29 கோடி ரூபாய் ஆகும்.

பட்ஜெட் 2015
 

பட்ஜெட் 2015

இந்தியாஸ்பென்டு நிறுவனம் செய்த ஆய்வின் பிடி 2015ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் எரிவாயு மானியமாக மத்திய அரசு 63,427 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும் என்றும், கடந்த ஆண்டு இத்தொகை 85,480 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

உணவு மானியம்

உணவு மானியம்

உணவு மற்றும் பொது விநியோகம் துறை தான் உணவு மானியத்தை கையாழுகிறது, இத்துறை மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் அமைச்சகத்திற்கு கீழ் செயல்படுகிறது. இத்துறை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக Targeted Public Distribution System (TPDS) மற்றும் Antodaya Anna Yojana (AAY) ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

65.2 மில்லியன் குடும்பங்கள்

65.2 மில்லியன் குடும்பங்கள்

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் சுமார் 65.2 மில்லியன் குடும்பங்கள் உள்ளது, இதில் 38% குடும்பங்கள் AAY திட்டத்திலும், மீதமுள்ள 62% குடும்பங்களும் TPDS திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இதில் AAY திட்டத்தின் கீழ் நலன் பெறும் மக்கள் அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், தாணியங்கள் கிலோ 1 ரூபாய்க்கும் பெற்றுவருகின்றனர். TPDS திட்டத்தில் மாநிலத்திற்கு ஏற்றவாறு போக்குவரத்து கட்டணங்களுடன் விலைகள் மாறுபடும்.

மானியம்

மானியம்

உண்மையில் மத்திய அரசு விற்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் தாணியங்களின் விலை வெளிச் சந்தையில் அதிகமாக தான் விற்கப்படுகிறது. இந்த விலை வித்தியாசத்தை ஈடு செய்ய தான் மத்திய அரசு மானியங்களை அளித்து வருகிறது.

எரிபொருள்

எரிபொருள்

இந்தியா 2014ஆம் ஆண்டு 158 மில்லியன் டன் டீசல், பெட்ரோல், எல்பிஜி, மண்ணெண்ணெய், விமான எரிபொருள் மற்றும் நாப்தாபயன்படுத்தியது, அரசுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், மற்றும் ஆயில் நிறுவனங்கள் எரிபொருளை குறைவான கட்டணத்தில் விற்பனை செய்ததன் மூலம் இந்நிறுவனங்கள் 139,869 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது.

அரசு மானியம்

அரசு மானியம்

இந்த நஷ்டத்தை மத்திய அரசின் 80,772 கோடி ரூபாய் மாணியத்தை கொண்டு நிதி நிலையை அரசு நிறுவனங்கள் ஈடு செய்தது. இந்த வருடம் இந்த தொகையை 57,336 கோடி ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உரங்கள்

உரங்கள்

இந்தியாவில் உணவு பொருட்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்குவது விவசாய உரங்களின் விலை நிலை தான். நாட்டில் 600 மில்லியன் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

விவசாய உரத்திற்கான மானியம்

விவசாய உரத்திற்கான மானியம்

2014ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 23.95 மில்லியன் டன் உரங்கள் பயன்படுத்தப்பட்டது, இதற்காக மத்திய அரசு 67,972 கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த வருடம் இத்தொகை கண்டிப்பாக உயர்ந்து விவசாயிகள் பலன் பெறுவார்கள் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Just Luck: Up To 20% Drop In Subsidies Likely

Finance ministry going to present budget on February 28. The Food, fuel and fertiliser reduced payouts, possibly up to 20% less than last year, are almost entirely because of the fall in petroleum prices internationally over the past few months
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X