கோ-ஜாவாஸ் நிறுவனத்தை கைப்பற்றும் திட்டத்தில் ஸ்னாப்டீல்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இகாமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் ஸ்னாப்டீல், தனது விநியோக முறையை மேம்படுத்தவும், எளிமையாக்கவும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான கோ-ஜாவாஸ் நிறுவனத்தை கைபற்ற, இந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

ஸ்னாப்டீல் தளத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க, பிற தனியார் நிறுவனங்களை மட்டுமே நம்பி வரும் நிலையில், ஸ்னாப்டீல் நிறுவனம் தனது விநியோக பிரிவை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான கோ-ஜாவாஸ் நிறுவனத்தை ரூ.150-200 கோடி வரையில் கைபற்ற திட்டமிட்டு வருகிறது.

 
கோ-ஜாவாஸ் நிறுவனத்தை கைப்பற்றும் திட்டத்தில் ஸ்னாப்டீல்!

இந்த கோ-ஜாவாஸ் நிறுவனம் இதுநாள் வரை ஹெல்த்கார்ட், ஜபாங், yepme, லென்ஸ்கார்ட் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 2,500 (பின்கோடுகள்) பகுதிகளில் லாஜிஸ்டிக்ஸ் சேவையை அளித்து வந்தது.

இருநிறுவனங்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை அனைத்தும் ஆரம்பகட்டத்திலேயே இருப்பதால், இதுக்குறித்த கேள்விகளுக்கு இரு நிறுவனங்களும் பதில் அளிக்கவில்லை.

அதுமட்டும் அல்லாமல் ஸ்னாப்டீல் நிறுவனம் மொபைல் டெக்னாலஜி நிறுவனத்தையும் கைபற்ற பேச்சுவார்த்தை ஈடுப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 2014ஆம் ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர் வரை நிதியுதவி பெற்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Snapdeal in talks to acquire logistics firm GoJavas for Rs 200 crore

Online marketplace major Snapdeal is in talks to acquire logistics firm GoJavas in a deal estimated to be about Rs 150-200 crore, as it looks to further strengthen its delivery operations in the country.
Story first published: Monday, March 16, 2015, 18:17 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X