கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ரூ.2,000 கோடி முதலீடு: திலீப் சங்வி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தை மீட்க இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான திலீப் சங்வி இந்நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளார்.

 

நாட்டின் முன்னணி மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான சன் பார்மா நிறுவனத்தின் தலைவர் திலிப் சங்வி, தனது சொந்த முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பல துறை நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.

2,000 கோடி ரூபாய்

2,000 கோடி ரூபாய்

திலீப் சங்வியின் குடும்ப முதலீட்டு நிறுவனமான டிஎஃப்ஏ (Dilip Shanghvi Family & Associates) மூலம் ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை வாங்க இரு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மதிப்பு 2,000 கோடி ரூபாயாகும்.

டிஎஃப்ஏ நிறுவனம்

டிஎஃப்ஏ நிறுவனம்

இதுக்குறித்து டிஎஃப்ஏ நிறுவனம் கூறுகையில், " ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவன பங்குகளை கைபற்றுதல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், இரு நிறுவனங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக" இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டி
 

போட்டி

ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவன பங்குகளை வாங்க எல் அண்ட் டி நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கு முன் இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் முன்ஜால் நிறுவனங்கள் முன்வந்தது, ஆனால் சில காரணங்களுக்காக இரு நிறுவனங்களும் தங்களது முடிவுகளை மாற்றிக்கொண்டது.

அடுத்த டார்கெட்

அடுத்த டார்கெட்

சுதிர் வாலியா தலைமையிலான டிஎஃப்ஏ நிறுவனம், ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனத்திற்கு முன் சுஸ்லான் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

திலீப் சங்வி தற்போது பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாக இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dilip Shanghvi in talks for a stake buy in ABG Shipyard

Troubled shipbuilder ABG Shipyard is looking for a white knight and it's now pinning hopes on India's richest man Dilip Shanghvi for a bailout. 
Story first published: Thursday, April 2, 2015, 14:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X