தமிழ் நாட்ல மட்டும் ஏங்க 'சரக்கு' இவ்ளோ காஸ்ட்லி?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தமிழக அரசு 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மதுபானம் விற்பனையின் மீது 14.5 சதவீத மதிப்பு கூட்டு வரி (VAT) விதித்தது. இதை எதிர்த்துச் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஹோட்டல் மற்றும் பார் அமைப்புகள் மனு அளித்தன.

 

தென்னிந்தியாவில் அதிக மதுபானம் விற்பனை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

 மனு விசாரணை

மனு விசாரணை

வரி உயர்வை எதிர்த்து தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் பார் அமைப்புகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பல மனுக்கள் அளித்தன.

இம்மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷன் மற்றும் சுந்ரிஷ் ஆகியோர் சமுதாய நலன் கருதியும், டாஸ்மாக் கடைகள் முலம் வருவாய் அதிகரிக்க அரசு உயர்த்திய வரியை குறைக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

 

வரி விதிப்பு

வரி விதிப்பு

ஹோட்டல் மற்றும் பார்களில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானத்திற்கு 14.5% வரி விதிக்கப்படும் என்றும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுபானத்திற்கு இத்தகைய வரி பொருந்தாது எனத் தமிழக அரசு அறிவித்தது. இதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்தது.

பிற மாநிலங்கள்
 

பிற மாநிலங்கள்

தென்னிந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகளவிலான வரி விதிக்கப்படுவதாக சந்தை ஆய்வுகள் கூறுகிறது.

14.5 சதவீத வரி

14.5 சதவீத வரி

தமிழ்நாட்டில் ஹோட்டல் மற்றும் பார்களில் விற்கப்படும் மதுபானத்திற்கு விதிக்கப்பட்ட 14.5 சதவீத வரி குறைக்க முடியாது என்று உயர்நீதி மன்றம் தெரிவித்த நிலையில், இனி பார் மற்றும் ஹோட்டல்களில் மதுபான விற்பனை அதிகளவில் பாதிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஹோட்டல் மற்றும் பார் வாடிக்கையாளர்கள் டாஸ்மாக் கடைகளை நாடுவார்கள் எனத் தெரிகிறது.

 

டாஸ்மாக்

டாஸ்மாக்

அரசு நடத்தும் மாதுபான கடைகளான டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானத்திற்கு இத்தகைய வரி எதும் கிடையாது.

பாகுப்பாடு

பாகுப்பாடு

மேலும் ஹோட்டல் மற்றும் பார், டாஸ்மாக் கடைகள் மத்தியில் அரசு பாகுப்பாடு காட்டுவதாக ஹோட்டல் மற்றும் பார் அமைப்புகள் குற்றம்சாட்டின. இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது நீதிமன்றம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Booze to remain costly in Tamil Nadu bars

Tipplers in Tamil Nadu must continue to pay at least 14.5% extra for their drinks in hotels and bars, as the Madras high court has refused to quash a government decision to levy 14.5% value added tax (VAT) on such business.
Story first published: Friday, April 3, 2015, 14:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X