மழை பொய்த்து, புயல் தாக்கியதால் காய்கறி விலை 25 சதவீதம் உயரும் அபாயம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் பருவ நிலை மாற்றத்தால் சரியான காலத்தில் மழை பெய்யாமல் போனதாலும், புயல் தாக்கியதாலும் காய்கறி விளைச்சல் அதிகளவில் பாதித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் காய்கறி விலை 20-25% வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான அஸோசாம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளைச்சல் பாதிப்பு

விளைச்சல் பாதிப்பு

நாட்டில் பருவ மழை மாற்றத்தால் 30 சதவீத அறுவடை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியது, இதில் முக்கியமாக கோதுமை விளைச்சல் பாதித்துள்ளதாக அஸோசாம் மற்றும் ஸ்கைமெட் வெதர் நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விலை

விலை

இவ்விரு நிறுவனங்களும் 'Monsoon 2015: Agri-business Risk or Opportunity' என்ற தலைப்பில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் மாம்பழம், வாழை, திராட்டசை, சனா போன்றவற்றின் விளைச்சல் அதிகளவில் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இப்பொருட்களில் விலை அடுத்த சில நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிற பொருடகள்

பிற பொருடகள்

பழங்களை போலவே கோதுமை, எண்ணெய் விதைகள், பருப்பு வகைகள் சரியான காலத்தில் மழை பெய்யாத காரணத்தினால் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது. அதேபோல் காய்கறி வகைகளில் தக்காளி, காலிஃபிளவர் ஆகியவை எப்போதும் இல்லாத அளவில் உற்பத்தி பாதித்துள்ளது.

14 மாநிலங்களில்

14 மாநிலங்களில்

இந்தியாவில் சரியான காலத்தில் மழை பெய்யாமல் போனதாலும், புயல் கரணமாகவும் 14 மாநிலங்களில் 106.73 இலட்சம் ஏக்கர் விலைப்பயிர்கள் நாசமாகியதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vegetable prices likely to climb 20-25%: Assocham

Prices of vegetables are likely to jump 20-25 per cent in coming days as untimely rains and hailstorms have damaged crops, says a study.
Story first published: Monday, April 6, 2015, 13:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X