சிறு நிறுவனங்களை ஊக்குவிக்க "முத்ரா வங்கி".. மோடியின் புதிய திட்டம்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நாட்டில் சிறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று 20,000 கோடி ரூபாய் மூதலீட்டில் முத்திரா வங்கியை துவங்கி வைத்தார்.

 

இவ்வங்கியின் முக்கியக் குறிக்கோளாக அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு நிறுவனங்களுக்கான நிதி உதவி அளிக்கவும், மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும் இவ்வங்கி திறக்கப்பட்டுள்ளது.

அது என்ன முத்ரா வங்கி, Micro Units Development Refinance Agency என்பதன் சுருக்கமே முத்ரா (MUDRA).

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்தியாவில் பெரு நிறுவனங்கள் 1.25 கோடி மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்து வருகிறது, ஆனால் சிறு நிறுவனங்கள் சுமார் 12 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புககளை அளிக்கிறது.

10 இலட்சம் வரை கடன்

10 இலட்சம் வரை கடன்

இவ்வங்கி ஒரு நிறுவனத்திற்கு, சிறு தொழிலகம் என்ற அங்கிகாரத்துடன் சுமார் 10 லட்சம் வரை கடன் அளிக்க முடியும். இதன் ஊரகப் பகுதிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் இவ்வங்கியின் மூலம் கடன் பெற்று தங்களது நிறுவனத்தை மேம்படுத்த முடியும். இதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை எளிமையாக அடையலாம்.

இன்றைய நாள் வரை இந்தியாவில் சுமார் 5.77 கோடி சிறு தொழிற்சாலைகள் உள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அருண் ஜேட்லி
 

அருண் ஜேட்லி

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அறிவித்த பட்ஜெட் அறிக்கையில் 20,000 கோடி ரூபாய் இருப்புடன், 3,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்துடன் முத்ரா வங்கி துவங்கப்படும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

சிசு, கிஷோர், தருண்

சிசு, கிஷோர், தருண்

இவ்வங்கி நிறுவனங்களுக்குக் கடன் அளிப்பதில் முன்று கட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் தான் சிசு, கிஷோர், தருண்.

இதில் சிசு 50,000 வரையிலான கடனும், கிஷோர் 5 இலட்சம் வரையிலான கடனும், தருண் 10 இலட்சம் வரையிலான கடனையும் அளிக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rs 20,000 cr MUDRA Bank launched by PM Narendra Modi

PM Narendra Modi launched the Rs 20,000 cr Micro Units Development Refinance Agency (MUDRA) Bank today and said , “the aim of the bank is to fund the unfunded small entrepreneurs and to strengthen savings habit in the country”.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X