அதிக சாலை வரி விதிக்கும் மாநிலங்களில் கர்நாடகா முதல் இடம்.. தமிழ்நாடு 2வது இடம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பயணிகள் வாகனத்திற்கு அதிகளவிலான சாலை வரி, அதாவது ரோடு டாக்ஸ் விதிக்கும் மாநிலங்களில் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. இப்பட்டியிலில் நம்ம தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் 10 சதவீதத்திற்கும் அதிமாகச் சாலை வரி விதிக்கும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.

சாலை வரி

சாலை வரி

ஒரு வாகன உரிமையாளர் அரசு சாலையைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்படும் வரி தான் ரோடு டாக்ஸ். இதுஇந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.

வாகனங்கள்

வாகனங்கள்

இந்தியாவில் வாகனங்களுக்கு ஏற்றவாறு சாலை வரி விதிக்கப்படுகிறது.

குறைந்த விலை (ரூ.3 முதல் 6 லட்சம்) கொண்ட கார் மற்றும் வேன், நடுத்தர விலை (ரூ.6 முதல் 10 லட்சம்), ஆடம்பர கார்கள்(ரூ.10 முதல் 20 லட்சம்) மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் என நான்கு நிலைகளில் வரி வசூல் செய்யப்படுகிறது.

 

கர்நாடகா

கர்நாடகா

இந்த நான்கு நிலைகளிலும் கர்நாடகா அதிக வரி வசூல் செய்யும் மாநிலமாக உள்ளது. குறைந்த விலை கொண்டகார்களுக்கு 14.43%, நடுத்தர விலை கொண்ட கார்களுக்கு 15.54%, ஆடம்பர கார்களுக்கு 18.87% வரியை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

குறைந்த விலை கொண்ட கார்களுக்கு 10%, நடுத்தர விலை கொண்ட கார்களுக்கு 10%, ஆடம்பர கார்களுக்கு 15% வரியை தமிழ்நாடு அரசு விதிக்கிறது.

வட மாநிலங்கள்

வட மாநிலங்கள்

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை இயக்கும் வட மாநிலங்களில் குறைந்த விலை கொண்டகார்களுக்கு 4% வரியும், நடுத்தர விலை கொண்ட கார்களுக்கு 8% வரியை மட்டுமே விதிக்கிறது.

குறைவான வரி

குறைவான வரி

இந்திய மாநிலங்களில் சிக்கிம் மாநிலம் 1 சதவீத்ததிற்கும் குறைவான வரி, திரிபுரா 1.5 சதவீதம், மேகாலையா 2.5 சதவீதம்,அருணாசல பிரதேசம் 3.5 சதவீதம், மிசோரம் 3 சதவீதம், சண்டிகர் 4 சதவீதம் ஆகியவை குறைவான வரி விதிக்கும் மாநிலங்கள் பட்டியலில் டாப் 5 இடங்களைப் பிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Car buyers pay highest road tax in Karnataka, lowest in North East

Road tax on passenger vehicles is the highest in Karnataka, across all price slabs. Overall, road tax is more than 10% in Karnataka, Tamil Nadu, Andhra Pradesh and West Bengal.
Story first published: Wednesday, April 15, 2015, 16:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X