ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பெரிய தலைகள்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பல பிரச்சனை மற்றும் குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பொறுப்புகள் அஜய்சிங்குக்கு கைமாறி சில மாதங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

 

கடந்த மாதம், இந்நிறுவனத்தில் இருந்து தலைமை வர்த்தக அதிகாரியான கனிஷ்வரன் அவிலி வெளியேறிய நிலையில்,தற்போது தகவல் தொழில்நுட்பத் பிரிவின் உயர் துணை தலைவரான சுதாகர் கொண்டிசெட்டி நிறுவனத்தை விட்டுவெளியேறினார்.

செலவுக் குறைப்பு

செலவுக் குறைப்பு

இந்நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் செலவுக் குறைப்பு நடவடிக்கையில்இறங்கியுள்ளது. இதனால் அடுத்தச் சில மாதங்களிலும் அதிகச் சம்பளம் வாங்கும் பல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டுவெளியேற உள்ளதாகத் தெரிகிறது.

சுதாகர் கொண்டிசெட்டி

சுதாகர் கொண்டிசெட்டி

கடந்த மாதமே நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்த சுதாகர், ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளில் ஸ்பைஸ்ஜெட்நிர்வாகக் குழுவின் ஒப்புதலும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

கலாநிதி மாறன்

கலாநிதி மாறன்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்நிறுவனத்தின் உயர் துணை தலைவராகக்கடந்த வருடத்தில் மார்ச் மாதம் நிறுவனத்தில் இணைந்தார் சுதாகர்.

அஜய் சிங்
 

அஜய் சிங்

2010ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொண்ட அஜய் சிங், சில மாதங்களுக்கு முன் கலாநிதிமாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவன வசம் இருந்த 58.46 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார்.

இதன் பின் நிறுவன பொறுப்புகள் அனைத்தும் அஜய் சிங்கிற்குக் கைமாறியது.

1,500 கோடி முதலீடு

1,500 கோடி முதலீடு

ஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகளை ஏற்ற அஜய் சிங், நிறுவன செயல்பட்டிற்காகச் சுமார் 1500 கோடி ரூபாய்க் கொண்டுவருவதாக உறுதிக்கொண்டார்.

இதுவரை அஜய் சிங் தலைமையில் நிறுவன செயல்பாட்டிற்காகச் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top SpiceJet official Sudhakar Kondisetty resigns

Sudhakar Kondisetty, SpiceJet’s senior vice president for information technology, has quit, the second top executive to step down in less than one month after the new owner Ajay Singh came onboard.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X