சில்லறை வர்த்தகத்தில் புரட்சி.. இரு முனைகள் இணைந்தன!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தை, பார்தி ரீடைல் நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளதாக இரு நிறுவனங்களும் தெகரிவித்துள்ளது.

 

இந்த இணைப்பில், பார்தி ரீடைல் நிறுவனம் ஃப்யூச்சர் ரீடைல் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் 750 கோடி ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டுள்ளது.

இந்த இணைப்பிற்குப் பின் இவ்விரு நிறுவனங்களின் ஆண்டு வருவாய் சுமார் 15,000 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

பார்தி ரீடைல்

பார்தி ரீடைல்

பன்னாட்டுச் சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்க பார்தி ரீடைல் நிறுவனத்துடன் கைகோர்த்தது.

தனது வர்த்தகம் ஸ்திரதன்மை அடையும் வரை வால்மார்ட் காத்திருந்து, பார்தி ரீடைல் நிறுவனத்தைக் கழற்றிவிட்டது. மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளுக்கான தடைகள் இந்நிறுவனத்தை அதிகளவில் பாதித்தது.

இதன் காரணமாகப் பார்தி ரீடைல் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்தது.

வெளியேற திட்டம்

வெளியேற திட்டம்

சில்லறை வர்த்தகத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டுக் கொண்டு இருந்த பார்தி நிறுவனத்திற்கு, ஃப்யூச்சர் குரூப் உடனான இந்த வாய்ப்பு மிகப்பெரியதாகும்.

அதேபோல் ஆடை மற்றும் துணி வர்த்தகத்தில் ஆதித்தியா பிர்லா நிறுவனத்தின் பேன்டலூன் நிறுவனத்துடன் செய்த வர்த்தகத்தில் ஃப்யூச்சர் குரூப் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது.

இதிலிருந்து மீளவே இருநிறுவனங்களும் இணைந்துள்ளது.

இணைப்புத் திட்டம்
 

இணைப்புத் திட்டம்

இந்த இணைப்பைப் பற்றி ஃப்யூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் பியானி கூறுகையில், நிறுவன இணைப்பிற்குப் பின்நிறுவன செயல்பாடு இரண்டாகப் பிரிக்கப்படும்.

இதில் ஃப்யூச்சர் ரீடைல் லிமிடெட் நிறுவனம் சில்லறை வர்த்தகத்தை மையமாகக் கொண்டு செயல்படும், மற்றொரு நிறுவனமான ஃப்யூச்சர் எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் கட்டுமானம், முதலீடு மற்றும் சொத்துக்குவிப்பு போன்ற பணிகளைப் பிரித்துக்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

பங்குச்சந்தையில் பட்டியல்

பங்குச்சந்தையில் பட்டியல்

கூடிய விரையில் ஃப்யூச்சர் ரீடைல் லிமிடெட், ஃப்யூச்சர் எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் எனப் பியானி தெரிவித்தார்.

பார்தி ரீடைல்

பார்தி ரீடைல்

இந்த இணைப்பின் மூலம் இணைக்கப்பட்ட கூட்டணி நிறுவனத்தின் 14-15 சதவீத பங்குகளைப் பார்தி ரீடைல் லிமிடெட் நிறுவனம் பெறும், மேலும் இந்நிறுவனத்தின் தலைவரான மிட்டல் நிர்வாகக் குழுவில் இடம்பெறுவார்.

இணைப்பும் பிரிப்பும்

இணைப்பும் பிரிப்பும்

இவ்விரு நிறுவனங்களின் இணைப்பு உறுதியான நிலையில், கூட்டணி பிரிப்பு பல தரப்புகளின் ஒப்புதலுக்குப் பின்னே செய்யப்படும். இதற்குக் குறைந்தது 6-7 மாதங்கள் வரை தேவைப்படும் எனப் பியானி தெரிவித்தார்.

கடன் அளவு

கடன் அளவு

நிறுவன இணைப்பிற்குப் பிறகு ஃப்யூச்சர் ரீடைல் லிமிடெட் நிறுவனத்திற்கு 1200 கோடி ரூபாய் கடனும், ஃப்யூச்சர் எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 3500 கோடி ரூபாய் கடனும் பிரிக்கப்படும்.

தற்போது இந்நிறுவனத்தின் கடன் அளவு 5,200 கோடி ரூபாயாகும்.

வணிகக் கிளைகள்

வணிகக் கிளைகள்

பார்தி ரீடைல் மற்றும் ஃப்யூச்சர் ரீடைல் நிறுவனத்திற்குத் தற்போது 243 நகரங்களில் 570 வணிகக் கிளைகள் உள்ளது. இதில்பார்தி நிறுவனத்தின் ஈசிடே ஸ்டோர்ஸ், ஃப்யூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பிக் பஜார், புட் பஜார், ஹோம் டவுன், ஈசோன், எப்பிபி மற்றும் புட்ஹால் ஆகியவை அடக்கம்.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஃப்யூச்சர் குரூப் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கத் துவங்கியது. இதன் படி திங்கட்கிழமை சந்தை முடிவில் இதன் விலை 12.6 சதவீதம் உயர்ந்து 129.65 ரூபாயாக இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Future, Bharti merge to create retail giant

In a move that will create one of the largest retail networks in the country, Kishore Biyani and Rajan Bharti Mittal announced the merger of Biyani’s Future Retail with Mittal’s Bharti Retail in a ₹750-crore all-stock transaction.
Story first published: Tuesday, May 5, 2015, 12:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X