மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் நுழைய அலிபாபா திட்டம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சர்வதேச ஈகாமர்ஸ் சந்தையில் வேகமாக வளர்த்து வரும் அலிபாபா நிறுவனம், இந்திய ஸ்மார்டபோன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமாக்ஸின் 20 சதவீத பங்குகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

அலிபாபா நிறுவனம் இந்திய சந்தையில் நேரடியாக இறங்க முடியாத காரணங்களால் ஈகாமர்ஸ் மற்றும் இண்டர்நெட் நிறுவனங்களில் முதலீடு செய்து வந்தது.

தற்போது மொபைல் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1.2 பில்லியன் டாலர் முதலீடு

1.2 பில்லியன் டாலர் முதலீடு

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் அலிபாபா குழுமத்தில் கிளை நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனம் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.

இதன் மூலம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் 1.2 பில்லியன் டாலர் தொகையை அலிபாபா குழுமம் முதலீடு செய்யும்.

6 பில்லியன் டாலர் நிறுவனம்

6 பில்லியன் டாலர் நிறுவனம்

இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 6 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்ய இந்திய சந்தையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டின் பல நிறுவனங்கள் இறங்கும் நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் அடுத்த 5 வருட இரட்டிப்பாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிறுவனம்
 

இரண்டாவது நிறுவனம்

இந்தியாவில் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் விற்பனையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது.

விற்பனையில் தொடர் உயர்வு

விற்பனையில் தொடர் உயர்வு

இந்நிறுவனம் இந்திய மக்களுக்கு ஏற்றவாறு, விலை குறைவாகவும், தரமான தயாரிப்புகள் வெளியீடுவதால் இந்நிறுவனத்தின் விற்பனை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சாப்ட்பாங்க்

சாப்ட்பாங்க்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் சாப்ட்பாங்க் முதலீடு செய்ய முயற்சி செய்த போது மதிப்பீட்டில் பிரச்சனை வந்ததால் இத்திட்டத்தில் சாப்ட்பாங்க் நிறுவனம் விலகியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அலிபாபா நிறுவனம் வந்துள்ளது.

மறுப்பு

மறுப்பு

இதுகுறித்த தகவல்களை அளிக்க மைக்ரோமேக்ஸ், அலிபாபா மற்றும் சாப்ட்பாங்க் ஆகிய அனைத்து நிறுவனங்களும் மறுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba in talks to buy $1.2bn stake Micromax

Alibaba Group Holding is in talks with India's Micromax Informatics to buy an about 20 percent stake in the smartphone maker.
Story first published: Saturday, May 9, 2015, 14:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X