பிரிக்ஸ் வங்கியால் இந்தியாவிற்கு என்ன லாபம்?

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: 2009ஆம் ஆண்டு உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து முதல் முறையாக ஆலோசனை கூட்டத்தை (BRIC SUMMIT) நடத்தியது.

 

2011ஆம் ஆண்டு இக்கூட்டணியில் தென் ஆப்பிரிக்காவும் இணைந்தது. இந்த 5 நாடுகளும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதித்தகத்தைக் குறைக்க ஒரு வங்கியை உருவாக்க 2012ஆம் ஆண்டுத் திட்டமிட்டது.

இத்திட்டத்தின் படி 2014ஆம் வங்கிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுத் துவக்க முதலீடாக 50 பில்லியன் டாலர் தொகையை இவ்வங்கியில் முதலீடு செய்வதாகத் திட்டமிடப்பட்டது.

சரி இந்த வங்கியின் மூலம் இந்தியாவிற்கு என்ன லாபம்?

முதல் தலைவர்... இந்தியர்

முதல் தலைவர்... இந்தியர்

இக்கூட்டத்தின் முடிவுகள் படி இவ்வங்கியின் முதல் தலைவர் ஒரு இந்தியாராகவும், அவரது பணிக்காலம் 5 வருடம் எனவும் நிர்ணயம் செய்தது.

(பிரிக்ஸ் வங்கியின் முதல் தலைவரானார் கே.வி.காமத்!)

5 வருடம்

5 வருடம்

இதன் மூலம், முதல் 5 வருடத்தில் இந்தியா பெறப்படும் கடனுக்கு வட்டி விகித குறைவும், இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் திட்டங்களை வடிவமைக்கவும் முடியும்.

இந்தியா தான் முக்கியம்

இந்தியா தான் முக்கியம்

தற்போதைய பொருளாதார நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த 5 நாடுகளுக்கும் மிகவும் முக்கியம் என்பதை அந்நாட்டுத் தலைவர்கள் உணர்ந்துள்ளனர்.

எனவே திட்ட வடிவமைப்பில் பல தளர்வுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

வர்த்தக நிலை மேம்பாடு
 

வர்த்தக நிலை மேம்பாடு

இவ்வங்கி நிறுவியதன் மூலம் இந்தியா, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படும்.

மேலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் நிலவும் இடைவேளை அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம உரிமம்

சம உரிமம்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியில் இந்தியா மற்றும் சில முக்கிய நாடுகளின் பங்கீடு மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களுக்குச் செவி சாய்க்காமல் உள்ளது. (இவை இரண்டும் அமெரிக்காவின் அல்லக்கைகள்)

ஆனால் பிரிக்ஸ் வங்கியில் 5 நாடுகளுக்கும் சமமான உரிமத்தை இக்கூட்டமைப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவின் தேவைகள் அதிகம்

இந்தியாவின் தேவைகள் அதிகம்

தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்கட்டமைப்பு, சுகாதார முறை, தொழிற்சாலை தளங்கள், அனைவருக்கும் வீடு, 100 ஸ்மார்ட் சிட்டிகள் போன்ற பல திட்டங்களுக்குத் தேவைப்படும் நிதியுதவிகள் பிரிக்ஸ் வங்கியில் இருந்து எளிதாகப் பெற முடியும்.

100 பில்லியன் டாலர்

100 பில்லியன் டாலர்

துவக்க முதலீட்டுத் திட்டமாக 5 நாடுகளும் 50 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டு அளவு 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும்பட்சத்தில், சர்வதேச சந்தையில் உள்ள இந்தியாவின் கடன் நிலுவைகள் குறைக்கப்படும்.

இதன் மூலம் நாட்டின் நிதி நிலையை மேம்படும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

வர்த்தகப் பேச்சுவார்த்தை

வர்த்தகப் பேச்சுவார்த்தை

இந்த வங்கியன் மூலம் இந்தியா ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்பிர்க்கா ஆகிய நாடுகள் மட்டும் அல்லாமல் உலகின் பிற நாடுகளுடன் பிரிக்ஸ் வங்கி உதவியுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் வாய்ப்புகள் உருவாகும்.

நாணய பரிமாற்றம்

நாணய பரிமாற்றம்

மேலும் இந்தியாவை வளரும் நாடுகளுக்கான நிதி பரிமாற்றத்தை இந்தியாவை மையமாக வைத்துக் நாணய பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதியை பிரிக்ஸ் வங்கி செய்ய முடியும்.

இதன் மூலம் இந்தியாவில் நாணய பரிமாற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்.

அப்ப நஷ்டம் எதுவுமே இல்லையா??

அப்ப நஷ்டம் எதுவுமே இல்லையா??

பிரிக்ஸ் வங்கியால் இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் ஏற்படும் நட்டங்களை நாளை பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ்

இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Advantages of brics bank to india

The initiative announced at the BRICS Summit at New Delhi 2012 has become a reality after the BRICS countries signed the document to create the $100 bn BRICS Development Bank and a reserve currency pool worth over another $100 bn.
Story first published: Tuesday, May 12, 2015, 13:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X