அன்னிய முதலீட்டுக்காக ஈகாமர்ஸ் நிறுவனங்களிடையே பிரச்சனை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஈகாமர்ஸ் சந்தையில் அன்னிய முதலீடு குறித்து இத்துறை நிறுவனங்களுடன் மத்திய அரசு வியாழக்கிழமைபேச்சுவார்த்தை நடத்தியது.

 

இதில் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவியதால் மத்திய அரசு தற்போது குழும்பியுள்ளது.

இருவேறு கருத்துக்கள்

இருவேறு கருத்துக்கள்

இப்பேச்சுவார்த்தையில் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் இத்துறை மீதான அன்னிய முதலீட்டை எதிர்த்தது. இதே நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் இத்துறை அன்னிய முதலீட்டிற்கு ஆதரவு தெரிவித்தது.

பி2சி ஈகாமர்ஸ்

பி2சி ஈகாமர்ஸ்

நேற்று நடந்த பேச்சுவார்த்தை முற்றிலும் பி2சி ஈகாமர்ஸ் சந்தையைச் சார்ந்தது.

ஆதாவது நுகர்வோர்களுடன் நேரடியாக வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் செய்யப்படும் அன்னிய முதலீடு குறித்துமத்திய அரசு சில முடிவுகளை எடுக்கவே இக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது.

வர்த்தக வகைகள்
 

வர்த்தக வகைகள்

ஈகாமர்ஸ் சந்தையில் இரண்டு வகையான வர்த்கதம் உண்டு அவை பி2சி மற்றும் பி2பி.

இதில் B2C என்பது நிறுவனங்கள் நுகர்வோர்களுடன் (Consumers) நேரடியாகச் செய்யப்படும் வர்த்தகம். B2B என்பது நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுடன் செய்யப்படும் வர்த்தகம்.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

இக்கூட்டத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "இத்துறையில் அன்னிய முதலீடுஅனுமதிப்பதன் மூலம் நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுடன் நேரடி தொடர்புடன் விற்பனை செய்ய உள்ளோம். இதனால் மேக் இன் இந்தியா திட்டமும் சிறப்பாக வளர்ச்சி அடையும். மேலும் நுகர்வோர்கள் அதிகளவிலான நன்மை அடைவார்கள்." எனத் தெரிவித்தார்.

இந்திய நிறுவனம்

இந்திய நிறுவனம்

பி2சி சந்தையில் அன்னிய முதலீடு அனுமதித்தால் மேக் இன் இந்தியா எந்த விதத்திலும் வளர்ச்சி அடையாது. அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வார்கள்.

இதனால் இந்தியாவில் உற்பத்தியாளர்களின் வர்த்தகம் பாதிக்கும் என இந்திய ஈகாமர்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதலீட்டுக்குப் பஞ்சம் இல்லை

முதலீட்டுக்குப் பஞ்சம் இல்லை

இந்திய ஈகாமர்ஸ் இதுவரை 9 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

60 நிறுவனங்கள்

60 நிறுவனங்கள்

இக்கூட்டத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் அமேசான் இந்தியா, ஸ்னாப்டீல், ஐகியா, ஜப்பான் பிளஸ், ஈபே மற்றும் பிளிப்கார்ட் ஆகியவை முக்கிய நிறுவனங்களாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FDI in e-commerce: It's Flipkart, Snapdeal vs Amazon, eBay

The government on Thursday began consultations on FDI in B2C e-commerce amid a sharp divide between Indian and foreign players.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X