22 ஷோரூம்களைத் திறக்க ரூ.800 கோடி முதலீடு: கல்யாண் ஜூவல்லர்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: சமீபத்தில் சென்னை டி-நகர் பகுதியில் மிகவும் பரபரப்புடன் புதிய கிளையைத் திறந்த கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் இந்தியா மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் மேலும் 22 நகை கடை ஷோரூம்களைத் திறக்க சுமார் 800 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

புவனேஸ்வரில் புதிய கிளை

புவனேஸ்வரில் புதிய கிளை

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தற்போது ஒடிஷா மாநில தலைநகரான புவனேஸ்வர் பகுதியில் புதிய கிளையைத் துவங்கியுள்ளது. இதன் மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸ் கிழக்கு இந்திய பகுதியில் முதல் முறையாகக் கால் தடம் பதித்துள்ளது.

200 கோடி வர்த்தகம்

200 கோடி வர்த்தகம்

இக்கிளையில் மூலம் இவ்வருடம் சுமார் 200 கோடி ரூபாய் வர்த்தகத்தை எதிர்பார்த்து தனது நிறுவன கிளையை இப்பகுதியில் விரிவாக்கம் செய்துள்ளதாகக் கல்யாண் ஜூவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.

டி.எஸ். கல்யாணராமன்

டி.எஸ். கல்யாணராமன்

இதுகுறித்து இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான டி.எஸ். கல்யாணராமன் கூறுகையில், நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியா மட்டும் அல்லாமல் மேற்கு ஆசியாவிலும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறோம். மேலும் இதற்கான முதலீடு அளவையும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார்.

22 கிளைகள்

22 கிளைகள்

மேலும் இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் சுமார் 22 கிளைகளைத் திறக்க நிறுவனம் சுமார் 800 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம் எனவும் கல்யாணராமன் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kalyan jewellers sets revenue target of Rs 200 crore from Odisha

Kalyan Jewellers Chairman cum Managing Director T S Kalyanaraman said the company planned to invest nearly Rs 800 crores in this fiscal to open 22 showrooms in India and West Asia.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X